பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

88 புதுமைப்பித்தன் கதைகள் இதோ, இதைப் பாருங்கள். இந்த உப்புப் போதுமா என்று பாருங்கள்!" என்று கையில் கொஞ்சம் உப்பைக் கொணர்ந்தாள் பத்தினி. "இதெல்லாம் உன் ன் 'டிபார்ட்மெண்டு என்னைக் கேட்டால் ......?" என்று சிரித்துக்கொண்டு, அவளைப் பார்த்தேன். "என்னிக்குமா உங்களைக் கேக்கறேன்.? ஏதோ கேட்டால்...13 அவள், காலையில் ஸ்நானம் செய்து, தலையை ஈரங் காயாமல் எடுத்துக் கட்டியிருந்தாள். அவ்வளவு அவசரம்! நெற்றியில் வீபூதி,அதற்கு வீபூதி, அதற்கு மேல் குங்குமம் ... பறந்து பறந்து வேலை செய்வதால் முகத்தில் ஒரு களை...வேகத் திலும் ஓர் அழகு இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்தேன்... "ஏடி, கமலா! கொஞ்சம் அந்தச் செல்லத்தை எடுத்து வை!" என்று கேட்டேன். "ஆமாம், அடுப்பிலே பாகு என்னமாக் காய்கிறதோ! இந்தச் சமயத்தில்தான் உங்களுக்கு..." என்று சொல்லிக் கொண்டு வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்துவிட்டு, உள்ளே சென்றாள். அப்பொழுது எங்கிருந்தோ மெல்லிய தளிர்க் காற்று வீட்டிற்குள் பிரவேசித்து உலாவியது. மாவிலைக் கும்ப லில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலை மடிக்க ஆரம்பித் தேன். எனக்கு வெற்றிலை போடுகிறதென்றால் ஒரு தனிப் பிரயோக முறை. அந்தச் சடங்கில் ஒரு சிறிதும் வழுவிவிட்டால் இலட்சியம் நிறைவேறிய மாதிரியே இருக்காது. வெளியே வெய்யில் ஏறஏற, உள்ளே பிள்ளையார் காய ஆரம்பித்தார். எப்படியானாலும் சுய குணத்தைக் காண்பிக்காமல் இருக்க முடியுமா? "அப்பொ பாளையங்கோட்டையிலே இருந்த கோட்டை கூட இடியலே. மதுரை வரைக்குந்தான் ரயில் வந்