பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

விநாயக சதுர்த்தி 91 "நீங்கதான் ஏன் சும்மா இருக்கிறீர்கள்? பிள்ளையாரை எடுத்து வைத்தால் ஆகாதோ?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள் என் மனைவி. "அதெல்லாம் முடியாது. நான் நாஸ்திகன். அதெல் லாம் குடும்ப விளக்கு குல விளக்கு 'டிபார்ட்மெண்ட்!" என்றேன் நான். "மஹாடிபார்ட்மெண்'டைக்கண்டுவிட்டீர்களாக்கும்! சோம்பல் என்றால் அப்படிச் சொல்றதுதானே! எல்லா கைலேலையா இருக்கே!" என்று பெருங் காயடின்னை எடுத்துக்கொண்டே, அவள் சொன்னாள். நாளும்? அதற்குள் என் மன ராணி என்னை மடியைப் பிடித் திழுத்தாள். இரண்டு பெண்டாண்டிக்காரன் பாடுதான்... நாள் ஓயாது

    • "சுப்பு வெளானுக்குப் பதினாறு வயசு. அப்பொ

மதத்திலே கிறுக்கு விழுந்தது. நாலு ஒழியாது அற்புதமாக விக்கிரகங்கள் செய்வான்... அப் புறம் அது பழைய களிமண்தான்... வேளார்தான் தள்ளாத வயசிலேயும் குடும்ப போஷணையைக் கவனிக்க வேண்டியதாச்சு. "அப்போப் பார்த்து அந்தக் கசமுத்து வேளார் மகளிடம் தடித்தனமா நடந்துகொண்டானாம் சுப்பு. சாயங் காலம் அந்தப் பெண் இசக்கி அம்மை, தண்ணீர் எடுக்க ஆற்றங்கரைக்கு போய் அவள் வந்தாளாம்..இவன் எதிரில் நின்றுகொண்டு, 'ஏட்டி! என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா' என்று கேட்டானாம். று "உள்ளுக்குள் பூரிப்போ என்னவோ! பானையைக் கீழே போட்டு உடைத்து, 'ஓ, ராமா!' என்று அழுது கொண்டு, 'இவன் என்னை இப்படிக் கேக்க ஆச்சா?' என்ற நினைப்பில் வீட்டுக்குச் சென்றாளாம். ஊர்க்காரர்கள் இவனை அடிக்கக் கூடிவிட்டார்கள். இவன் தோழர்கள் எல்லாம் இவனுக்குப் பரிந்து பொய் சொல்லியும், "விளையாட்டுக்குச் சொன்னான் என்று சொல்லியும் பார்த்தார்கள்.