பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

விநாயக சதுர்த்தி .93 கள் கழிந்தன. பெண் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அதெல்லாம் நடக்கிற காரியமா? போ! போ" என்று சொல்லிவிட்டான் சுப்பு. "அன்னிக்கி விநாயக சதுர்த்தி, சுப்பு விடியற்காலை யிலேயே எழுந்து ஒரு விநாயகர் செய்துகொண்டிருந்தான். விநாயகர் என்றால். உம்முடன் பேசுவதுபோல் இருக்கும், அவ்வளவு உயிருடன் இருந்தது அந்தக் களிமண் கண் கள்! மனைவியும் ரொம்ப ஜரூராகப் பூஜைக்கு வேண்டிய வேலைகளெல்லாம் செய்துகொண்டிருந்தாள். $6 8 'ஏட்டி, நான் குளிச்சிட்டு வாரேன்!' என்று வெளியே சென்றான் சுப்பு. 'அன்றைக்குப் பார்த்து துபாஷ் வீட்டுச் சேவகர்கள் நல்ல பிள்ளையார் வேண்டித் தேடி யலைந்தார்கள். சுப்பு செய்த பிள்ளையார் எசமானுக்குப் பிடித்திருக்கும் என்று நம்பினார்கள். அதிலும் வெள்ளைப் பிள்ளையார்: கேட்கவா வேண்டும்! "முதலில் இசக்கி அம்மைக்குக் கொடுக்க இஷ்ட மில்லைதான். இருந்தாலும் நாலு பணம் அஞ்சு பணம் என்று ஆசை காட்டினால்! வில்லைச் சேவகன் (டவாலி போட்டவன்) சும்மா தூக்காமல், கொடுப்பதாகச் சொன்னதிலேயே அவளுக்குப் பரம திருப்தி. அதைக் கொடுத்து விட்டு மாமனார் செய்த குட்டிப் பிள்ளையார் களில் ஒன்றைக் கொண்டுவந்து அந்த இடத்தில் வைத் திருந்தாள். "சுப்பு குளித்துவிட்டு வந்தான். கதை தெரிந்தது வீட்டில் நடந்த இந்தத் தேவடியாத் தொழில் உனக்கு எதுக்கு?' என்று அவளை எட்டி உதைத்துவிட்டு, ஈரத் துணியைக் கூடக் களையாமல், அவன் நேரே வெளியே சென்றான். "அப்பொ துபாஷ் முதலியார் வீட்டில் பூஜை சமயம். இந்தப் பயல் தடதடவென்று உள்ளே போய், பூஜைக்கு வைத்திருந்த பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினானாம். முதலில் துபாஷ திடுக்கிட்டார். ஆனால்