பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

98 புதுமைப்பித்தன் கதைகள் தெளிவாக இருந்தாலும், குறைந்தது நாற்பதடி ஆழமாவது இருக்கும். உள்ளே சிறு மீன்களும், கறுப்புத் தவளைக் குஞ்சுகளும் பளிச் பளிச்சென்று மின்னி ஓடின. பாறைச் சரிவில் நின்று இரு கைகளாலும் அள்ளி அள்ளித் தண்ணீரைக் குடித்தேன். அளவுக்கு மிஞ்சிக் குடித்ததினால் சிறிது சோர்வு. வலிக்கும் கால்களைத் தண் ணீரில் முழங்கால் அளவுக்கு வீட்டுக்கொண்டு உட்கார்ந்து விட்டேன். அப்பா, என்ன சுகம்! பழையபடி எந்த வழியாகத் திருப்புவது என்பது பெரிய பிரச்னையாயிற்று. உட்கார்ந்து பார்த்துக்கொண்டே யோசித்தேன். சுற்றுமுற்றும் சுனைக்குப் பக்கத்தில், பாறைச் சரிவில், ஓர் உயர்ந்த ஆலமரம். நான் அத்தனை நேரம் அதைக் கவனிக்கவில்லை. அதன் ஓர் உச்சி நான் சிறிது நேரத்திற்கு முன் நின்றிருந்த உயர்ந்த மேட்டை எட்டியது. எத்தனை வயதிருக்கும்? பழங்கால விருட்சம்!" என்று எண்ணமிட்டுக் கொண்டே அண்ணாந்து பார்த்தேன். அந்த ஓரத்து உச்சிக் கிளையில் என்ன தொங்கிக் கொண்டிருக்கிறது? பழந்தின்னி வௌவால்! நரித் தலையும். தோல் இறகுகளும் பிரம்மாண்டமாக இருக்கும். காசித் தேவர் இந்த ஜாதி வௌவால்களைப் பற்றிச் சொல்லியிருக் கிறார் கிடைப்பதே அருமையாம்! மேலும் அவருக்குப் பிரியமான மாமிசமாம். 'அதை ஒரு கை பார்ப்போமே!' என்று பாறையில் வைத்திருந்த துப்பாக்கியை துப்பாக்கியை எடுத்து. அதை நோக்கிக் குறி வைத்தேன் அடேடே! சுட்டுவிடாதே! நில் நில்!" என்று, பயத் தில் பிளிறும் மனிதக் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன். "அடேடே! நில்! நான் வௌவாலில்லை! வேதாளம்! சுட்டுவிடாதேயப்பா, தயவு செய்து!" என்று மறுபடியும் கூவியது அக்குரல்,