பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூரத்திலிருந்து இருவர் அவனைக் கண்டுவிட்டார்கள். மகனும் மருமகனும்; இயற்கைச் சட்டத்தின்படி அப்படித்தான். சமுதாயம் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்.

வேகமாக ஓடி வருகின்றனர்.

வெளிச்சம்; வெளிச்சம்.

மூவரும் சேரும் சமயம். இழுத்துவிடலாம்.

"ஐயோ?"

ஹதம். ரத்தக் களரி.

முவரின் ரத்தங்கள் ஒன்றாய்க் கலந்தன. ஒன்றாய்த்தான் இருக்கின்றன.

இதில் யாரை நந்தன் என்பது?

புதிய ஒளியை இருவர் கண்டனர். இருவிதமாகக் கண்டனர்.

இறந்த பிறகாவது சாந்தியாகுமா?

சமுதாயத்திற்குப் பலிதான். அதை யார் நினைக்கிறார்கள்.

பத்திரிகையில் பெரிய நீண்ட செய்திகள்...

பிறகு ஆதனூரில்...?

மணிக்கொடி, 22.07.1934

புதுமைப்பித்தன் கதைகள்

107