பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரத்தன் டாட்டா அறக்கட்டளை வழியே ஒரு நல்கையைக் கலைகளுக்கான இந்திய மையம் (பெங்களூர்) இந்த ஆண்டின் தொடக்கத்தில் காலச்சுவடு அறக்கட்டளைக்கு வழங்கியது. பதிப்பு மற்றும் ஆராய்ச்சித் தேவைக்கென ஒளிநகல் எடுக்கும் நிலைமாறி, நுண்படச் கருளிலும் குறுந்தகட்டிலும் ஆவணமாக்கம் செய்து ஆராய்ச்சியாளர் அனைவர்க்கும் பயன்படுவதற்கு இதன் மூலம் வழி ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பென்னம் பெரிய இந்த நூலை, அதன் பல்வேறு சிக்கல்களோடும் நுட்பங்களோடும் அணியம் செய்வதென்பது சாதாரண வேலை அன்று காலச்சுவடு பதிப்பகத்தின் செல்வி சி. லீலாவும், திரு. அ. குமாரும் இதில் காட்டிய ஈடுபாடும் செயல்திறனும் போற்றத்தக்கன.

பதின்பருவத்திலேயே என்னைப் புதுமைப்பித்தனிடம் ஆற்றுப்படுத்தியவர்கள் என் முதலாசிரியர்கள் 'முகம்' மாமணியும், புலவர் த. கோவேந்தனும்.

புதுமைப்பித்தன் படைப்புகளைச் செம்மையாக வெளியிடுவதற்கு அனுமதி வழங்கிய திருமதி தினகரி சொக்கலிங்கம் அவர்களும் திரு. ஹெச். சொக்கலிங்கம் அவர்களும் காலச் செலவைப் பொருட்படுத்தாமல், இந்நூல் செம்மையாக வெளியாக வேண்டுமெனப் பொறுமை காத்தனர்.

இப்பதிப்பு வெளிவருவதில் திரு. சுந்தர ராமசாமி காட்டிய ஆர்வமும் தந்த ஒத்துழைப்பும் இயல்பானவை; எதிர்பார்க்கத்தக்கவை. இந்நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை பொருத்தமானது என்று சொல்வது மிகை. ஐம்பதாண்டுகளாகப் புதுமைப்பித்தன் பற்றி எவ்வளவோ பேசியும், இன்றும் புதிதாகச் சொல்வதற்கு அவருக்கு நிறைய இருக்கிறது.

பெரிய காரியங்களையும் திட்டமிட்ட, முனைப்பான முயற்சியால் செய்து முடித்துவிடலாம் என்று கண்முன் காட்டிவருபவர் கண்ணன். சுந்தர ராமசாமி குடும்பத்தினர் ஒவ்வொருவரும் இந்தப் பணியில் ஏதோ ஒரு வகையில் உதவி இருக்கிறார்கள்.

செய்ந்நன்றி கொன்றால் உய்வில்லையாதலால் இவர்கள் அனைவரின் உதவியையும் நெஞ்சார நினைவுகூர்கிறேன். இவர்களனைவரின் ஒத்துழைப்போடு புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்புகளின் அடுத்த தொகுதிகளும் வெளிவரும் என்று நம்புகிறேன்.

திருநெல்வேலி

சலபதி

6 ஆகஸ்டு 2000

14