பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சண்பகக் கிளைகளின் ஊடே நிலாக் கற்றை சவக்குழியின் பேரில் விழுகிறது.

தூரத்திலே அந்த நாயின் ஏக்கமான ஊளை.

சிறிய காற்று.

சண்பகம் தனது கனவுகளைச் சொரிகிறது.

இதனால்தான் அந்தப் பள்ளத்தாக்கிற்கு ஸ்டேதம் வாலி (பள்ளத்தாக்கு) என்று பெயர்.

ஊழியன், 28.9.1934