பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைப்புப் படிவத்தை மட்டும் மாற்றிக் கட்டடம் செய்து தனிநூலாகவும் விற்றுள்ளது.

புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான அவருடைய கதைத் தொகுதிகள் இவைதாம்.

1952இல் முல்லைப் பதிப்பகம் வெளியிட்ட 'விபரீத ஆசை' என்ற தொகுதி மட்டும் 1947இலேயே புதுமைப்பித்தனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முல்லை முத்தையாவிடம் வெளியிடத் தரப்பெற்றவை என்று அச்சமயத்தில் 'முல்லை' இதழின் ஆசிரியராக இருந்த ரகுநாதன் கூறுகிறார்.' இத்தொகுதியில் இடம்பெற்ற ஏழு கதைகளும் வேறு தொகுதியில் இடம்பெறாதவை என்பதும் இதை உறுதிப்படுத்துகிறது.

புதுமைப்பித்தன் மறைந்த பிறகு அவருடைய கதைகள் தொகுக்கப்பட்ட முறை பின்னாளில் ஏற்பட்ட பல குழப்பங்களுக்கும் காரணமாகிவிட்டது. தமிழ்ச் சுடர் நிலையம் வெளியிட்ட 'அவளும் அவனும்', 'கபாடபுரம்', 'சிற்றன்னை' ஆகியவற்றோடு வெளிவராத நூல்களையும் வெளிவந்ததாக விளம்பரப்படுத்திவிட்டது.

திருமதி கமலா விருத்தாசலம் அவர்களிடம் அனுமதி பெற்றுப் புதுமைப்பித்தன் நூல்களையெல்லாம் 1953ஆம் ஆண்டிலிருந்து ஸ்டார் பிரசுரம் வெளியிடத் தொடங்கியது. ஏற்கெனவே நூல் வடிவம் பெற்றவை போக, 'மணிக்கொடி'யிலும் 'ஊழிய'னிலும் வெளியாகித் தொகுக்கப்படாமல் போன கதைகளையும் பிற உதிரிக் கதைகளையும் கொண்ட 'புதிய ஒளி'யை 1953இல் வெளியிட்டது. தழுவல் என்று பின்னால் அடையாளம் காணப்பட்ட கதைகள் அனைத்தும் இதில் தான் முதன்முறையாகத் தொகுக்கப்பட்டன.

புதுமைப்பித்தன் நூல்களின் பதிப்பு வரலாற்றின் பின்னணியில், அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த முதற்பதிப்புகளே இந்நூலுக்கு மூலபாடங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் காலத்தில் நூலுருவம் பெறாத கதைகளுக்கு, அவை முதலில் இதழ்களில் வெளியான பாடங்களே கொள்ளப்பட்டுள்ளன. முதலில் வெளியான இதழ்களும் கிடைக்காமல், புதுமைப்பித்தன் காலத்தில் நூலுருவமும் பெறாமல் போன 'சாமியாரும் குழந்தையும் சீடையும்', 'இந்தப் பாவி', 'சொன்ன சொல்' 'இலக்கிய மம்ம நாயனார் புராணம்', 'சிற்றன்னை' ஆகியவற்றுக்கு மட்டுமே புதுமைப்பித்தன் மறைந்த பின்பு வெளியான நூற் பதிப்புகள் மூலபாடமாகக் கொள்ளப்பட்டுள்ளன. 'ஆண்மை'யில் வெளியான கதைகளில் இரண்டு 'புதுமைப்பித்தன் கதைக'ளிலும் ('பறிமுதல்', 'ஆண்சிங்கம்'), ஒன்று 'ஆறு கதைகளி'லும் (வ'ழி') இடம் பெற்றிருக்கின்றன. 'ஆண்மை' பிந்தைய பதிப்பாயினும் முந்தைய பதிப்புகளே மூலபாடமாகக் கொள்ளப்பட்டுள்ளன. 'ஆண்மை' அச்சுப் பிழைகள் மலிந்ததாக உள்ளதே இதற்குக் காரணம்.

புனைபெயர்கள்

புதுமைப்பித்தனின் தழுவல் கதைகள் பற்றிய விவாதம் அவருடைய படைப்புக்கள் எந்தப் புனைபெயரில் வெளியாயின என்ற தகவலை மிக முக்கியத்துவமுடையதாக ஆக்கிவிட்டது. 'மொப்பஸான் கதையின்

20