வேளாருக்கு எட்டிற்று. கோயிலுக்கு 'நூறு தேங்காய் அபராதம்' கொடுப்பதாகச் சொல்லி பையனை மீட்டு வந்தார்.
"ஆனால், மறுநாளைக்கு கசமுத்து வேளார் மண் எடுக்கப் போன சமயம், இவன் அவர் வீட்டுக்குள் போய்ப் பெண்ணுக்கு அடுக்களைத் தாலி கட்டிவிட்டான்.
"ஊரில் ரகளைதான். 'கலியாணம் என்னவோ ஆச்சு!' என்று இரண்டு சம்பந்திகளும் கூடிக்கொண்டால்... கொஞ்ச நாள் ஊர்க்காரருக்கு நன்றாகப் பேசிக்கொண்டிருக்க விஷயம் கிடைத்ததுதான் மிச்சம்...
"இரண்டு சிறுசுகளும் புதுக்குடித்தனம் செய்தன.
"கொஞ்சநாள் வரைக்கும் சுப்பு ஒழுங்காக வீட்டுக் காரியங்களைக் கவனித்து வந்தான். பானை வனைகிறது, சுடுகிறது - இதிலெல்லாம் ரொம்ப ஜோர்...
"அப்பத்தான் கும்பினியானும் கட்டபொம்முவும் முட்டிக்கிற சமயம் - கும்பினிக்காரன் 'துபாஷ்' யாரோ பட்டணத்து முதலியார். அந்த வட்டாரத்திலே அவருக்குக் கொஞ்சம் சொற் சக்தியுண்டு. அவரும் குட்டந்தீர்த்த துறையிலேதான் குடியிருந்தார்.
"ஒரு நாள் சுப்பு மண்வெட்டப் போனதிலிருந்து பிடித்தது வினை...
"ஏதோ ஒரு இடத்திலே வெள்ளைக் களிமண் அகப்பட்டது. பயல் வண்டி நிறைய வாரிக்கொண்டு வந்தான். ஆனால் பழைய பொம்மை செய்கிற வெறி வந்துவிட்டது. அதற்கப்புறம் சக்கரத்தைச் சீந்துவதில்லை... அந்தச் சமயத்தில்தான் அவன் மனைவிக்கு நாலு மாசம் கர்ப்பம். வீட்டில் கிடைத்ததைச் சாப்பிடுகிறது. பொம்மை செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது - இப்படியே நாட்கள் கழிந்தன. பெண் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அதெல்லாம் நடக்கிற காரியமா? 'போ! போ! என்று சொல்லிவிட்டான் சுப்பு.
"அன்னிக்கி விநாயக சதுர்த்தி. சுப்பு விடியற்காலையிலே எழுந்து ஒரு விநாயகர் செய்து கொண்டிருந்தான். விநாயகர் என்றால் உம்முடன் பேசுவதுபோல் இருக்கும் - அவ்வளவு உயிருடன் இருந்தது அந்தக் களிமண் கண்கள்! மனைவியும் ரொம்ப ஜரூராகப் பூஜைக்கு வேண்டிய வேலைகளெல்லாம் செய்து கொண்டிருந்தாள்.
"'ஏட்டி, நான் குளிச்சிட்டு வாரேன்!' என்று வெளியே சென்றான் சுப்பு.
"அன்றைக்குப் பார்த்து துபாஷ் வீட்டுச் சேவகர்கள் நல்ல பிள்ளையார் வேண்டித் தேடியலைந்தார்கள். சுப்பு செய்த பிள்ளை-
372
விநாயக சதுர்த்தி