வேதாளம் சொன்ன கதை
எனக்கு வேட்டையாடுவதில் அபார பிரேமை. எனக்கு இந்தப் பழக்கம் வருவதற்குக் காரணமே காசித் தேவர்தான். அவர் பொதுவாக நல்ல மனுஷ்யர்; கொஞ்சம் நிலபுலன்களும் உண்டு. வருகிற கலெக்டர்களுக்கு எல்லாம் 'ஷிகாரி' உத்தியோகம் பார்த்துப் பல மெடல்கள் பெற்றவர். சமயாசமயங்களில் சில கலெக்டர்களுக்குப் புலிகளைச் சுட்டுக்கொடுத்து, புகழும் புலித்தோலும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.
எனக்கு வேட்டையில் பிரியம் பழக்க வாசனையில் பிறந்ததென்றாலும் மிளா, மான், முயல் இவைகளின் எல்லையைத் தான் எட்டியிருந்தது. ஏனென்றால், நமக்கு நிச்சயமாக இந்த ரகத்தில் அபாயம் கிடையாது அல்லவா?
அன்று நான் காசித் தேவரை அழைத்த பொழுது தமக்குக் கோர்ட்டில் வேலையிருப்பதாகக் கூறிவிட்டார். அவருடைய துப்பாக்கியை வாங்கிக் கொண்டு பழைய பாபநாசத்தை அடைந்தேன். ஏன் கலியாண தீர்த்தம் வரை சென்று வரலாகாது என்று யோசனை தட்டியது.
முட்புதர் வழியாகவுள்ள குறுக்குப் பாதையாகச் சென்றேன். அப்பொழுது சித்திரை வெய்யில். குத்துச் செடிகளையும் முட்புதர்களையும் தாண்டி, உயர்ந்த மரங்கள் அடர்ந்த பாதைகள் வழியாக, சருகுகள் வழுக்கும் சமயம் துப்பாக்கிக் கட்டையை ஊன்றிக் கொண்டுசென்றேன். கீழே திரும்பிப் பார்த்தால் பாறைகளும் கண்கூசும் கானலும்! உயர, எங்கோ இடைவெளி மூலமாகத் தூரத்துப் பொதிய மலைச் சிகரம் தெரியும். பஞ்சு மேகங்கள் சிகரத்தைத் தழுவியும் தழுவாமலும் நீல வானில் மிதந்தன.
போகும் பாதையில் வழி நெடுக, சில்வண்டுகளின் காதைத் துளைக்கும் ரீங்கார சப்தம். சமயாசமயங்களில், திடீரென்று, பேசி வைத்தாற் போல் ஒலி நிற்கும். அந்த நிசப்தம் - மௌனம் - சிரமமற்று ஒன்றிலிருந்து ஒன்றில் தாவிச் செல்லும் சிந்தனை வண்டின் போக்கைச் 'சக்'கென்று விசை வைத்ததுபோல் நிறுத்திவிடும். அந்த
புதுமைப்பித்தன் கதைகள்
385