பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமென்று முதலில் நம்பி, அதற்கு வைத்தியம் செய்ய வேண்டுமென்று நினைத்தார்.

உடனே, தமது மோட்டார் காரில் டாக்டர் விசுவநாத் பங்களாவிற்குச் சென்றார். தலைமொட்டை; இடையில் ஒரு காவி வேஷ்டி; காலில் குப்பிப்பூண் பாதக்குறடு; இந்த அலங்காரத்தைக் கண்டதும் டாக்டர் வில்க்கின்ஸனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "எப்படியானாலும் இந்தியர்கள் இந்தியர்கள்தான்" என்று நினைத்துக் கொண்டார்.

"என்ன டாக்டர்! இது என்ன ஜோக்? என்றைக்கு உமது தெய்வங்கள் உம்மை பேட்டி கண்டன? தவடையில் கொடுத்து ஏன் அனுப்பவில்லை" என்று சிரித்தார்.

"வில்க்கின்ஸன்! சிரிக்காதே; இது ஒரு புதிய பரிசீலனை. எனது சித்தாந்தம் ஒரு முடிவு கட்டப் படவில்லை. பரிசீலனை செய்துதான் பார்க்க வேண்டும்" என்றார் டாக்டர் விசுவநாத். இவர்களிடத்தில், பாசறை ஆஸ்பத்திரி வாழ்க்கையில் தோன்றிய வெறி காணப்பட்டது.

டாக்டர் வில்க்கின்ஸனுக்கு ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை. 'வெல்! குட்லக்!' என்று சொல்லிவிட்டுத்தான் திரும்ப முடிந்தது.

ஐந்து வருஷங்கள் கழித்து கைலாச பர்வத சிகரயாத்திரைக் கோஷ்டியில் டாக்டர் வில்க்கின்ஸனும் ஒருவராகச் சென்றார். அப்பொழுது, பிளான் போடப் பட்ட பாதையே புதிது. இதுவரை யாரும் அந்த வழியில் சென்றதில்லை. திபேத்திய சர்க்கார் கொஞ்சம் தில்லு முல்லு செய்ததால் யாத்திரைக் கோஷ்டித் தலைவர் கடைசி நேரத்தில் வகுத்தது. கோஷ்டியில் பலத்த எதிர்ப்பு இருந்தாலும், யாத்திரைக்காரர்கள் விட்டுக் கொடுக்க மனமில்லாமல் ஒத்துக்கொண்டனர்.

யாத்திரை ஆரம்பித்து இருபதாவது நாள். ஒன்றும் முளைக்காத உறைபனிப் பாலைவனத்தின் வழியாகச் செல்லுகின்றனர். மணல் பாதைதான். அருகில் அரை மைல் தூரத்தில் பனிச் சிகரம்.

கோஷ்டியின் நடுவில் நடந்து சென்று கொண்டிருந்த டாக்டர் வில்க்கின்ஸனுக்குச் சிந்தாந்தச் சாமியாரின் அடையாளங்களுடன் ஒரு மனிதன் பனிக்கட்டி உச்சியில் நிற்பதுபோலத் தெரிந்தது.

"அதோ பாருங்கள் அந்த மனிதனை! அவனை எனக்குத் தெரியும். அவன் ஒரு சாமியார்" என்று தனக்கு முன்னே செல்லுபவரிடம் சொன்னார்.

முன்னே சென்ற ஜேக் ஆல்பர்ட்ஸன், ஆல்ப்ஸ் கிளப் நிரந்தர அங்கத்தினர். தூரதிருஷ்டிக் கண்ணாடியைத் திருப்பி வைத்துப் பார்த்து, "மனிதன் மாதிரித் தான் தெரிகிறது... ஆனால்..." இவர் பேசி

446

உபதேசம்