பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஆசையா! மனசு அப்படியே துடிதுடிக்கிறது. ஆமாம்; புரட்சிக்காரரா? எப்படி இருப்பார்? ரொம்பத் தீவிரமாக இருப்பாரோ?"

"பாக்கணும்ன்னா கூட்டிண்டு போறேன்" என்று புதிய சிஷ்யன் சேர்த்துக்கொடுக்கும் சேவையில் இறங்க முயன்றேன்.

"இல்லே, வீட்லெ காப்பி ஆறிப் போய்விடும். சுருக்க போவோம் வாருங்க. இல்லாட்டா ஒரே தொல்லைதான்" என்று எட்டி நடந்தான் பாலு.

இரண்டு தெய்வங்களுக்கு ஒரே சமயத்தில் சிஷ்யனாகும் திண்டாட்டத்தை பாலுவுக்கு ஏற்படுத்தக்கூடாது என்ற ஜீவகாருண்ய சேவையில் ஈடுபட்டேன்.

ஜோதி, ஜூலை 1938

புதுமைப்பித்தன் கதைகள்

453