கொண்டு அவனை உயிர்ப்பிக்கப் பரமசிவனைக் கூப்பிடலாமா, அல்லது வெறும் மந்திரவாதியைத் தருவித்து அவனுக்கு ராஜா மகளைக் கட்டிக் கொடுத்துக் கதையை மேளதாளத்துடன் 'மங்களமாக' முடித்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில், "என்ன ஸார், முடிந்து விட்டதா?" என்று கொண்டே நுழைந்தார் சுந்தரம் பிள்ளையிடம் கதை கேட்ட ஆசிரியர்.
"பையனை அனுப்புகிறேன் என்றீர்களே" என்று சொல்லி எழுந்தார் ஸ்ரீ பிள்ளை.
"பையனிடம் கடுதாசி அனுப்பிவிட்டால் என்றுதான்..." என்று சிந்தித்துக் கொண்டே மேஜையிலிருந்த கடுதாசிகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார் ஆசிரிய நண்பர்.
"இதுதானா நாலு பக்கம்? - போஸ்டர் எழுத்தில் போட்டாக் கூட நாலு பக்கம் வருமோ என்னமோ? இதற்கு என்ன அர்த்தம்?" என்றார்.
"நீர் தான் சொல்லுமே!"
"சரி வாருங்க, காபி சாப்பிட்டு வரலாம்!" என்றார் நண்பர்.
"வருவது எதற்கு, நேரா வீட்டுக்குப் போவோமே?" என்றார் சுந்தரம் பிள்ளை.
"அங்கே போனால் எழுதுவீரா?" என்றார் நண்பர்.
"போன பிறகு பார்த்துக் கொள்ளலாம், நீங்க எழுந்திருங்க!" என்று கொண்டு மேஜையை எடுத்துப் பூட்ட ஆரம்பித்தார் பிள்ளை.
துண்டை எடுத்து உதறி மேலே போட்டுக் கொண்டு புறப்பட்டார் நண்பர்.
"கொஞ்சம் இருங்க, வெற்றிலை போட்டுக் கொண்டு வருகிறேன்" என்று உட்கார்ந்து கொண்டார் ஸ்ரீ பிள்ளை.
வெற்றிலை போட்டு முடிந்தது.
"ஸார், ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக் கடைசி வரியை எழுதினார், பிள்ளை.
"தான் படித்த அத்தனை கதைகளையும் படிக்க வேண்டும் என்று ராஜா அந்த மந்திரிக்குத் தண்டனை அளித்தான்" என்று எழுதி, "இப்படி முடித்து விடலாமா" என்றார்.
"எப்படியாவது முடிந்தால் போதும்; என்னிடம் குப்பைக் கூடை இருக்கிறதை மறந்துவிட்டீரா?" என்றார் நண்பர்.
"அது என்னிடமே இருக்கிறதே!" என்று சொன்னார் பிள்ளை.
ராஜாவும் மந்திரி பிரதானிகளும், இங்கிலீஷில் கசங்கும் மாகாண மின்சாரத் திட்டத்துடன் கிடந்து நசுங்கினர்.
1941க்கு முன்பு
490
கருச்சிதைவு