"இதைப் பத்து வருஷத்துக்கு முந்தியே சொல்லியிருக்கக்கூடாதா. உன் பேருக்கு பாங்கியிலே ஒரு ஐயாயிரமாவது மிஞ்சியிருக்கும்; அதைக் கொண்டு எத்தனை ஜோடி மாடு வாங்கலாம்."
"நீ கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன்."
"இப்போதான் என்ன குடி முழுகிப் போச்சு; ஐயாவுக்கு நீங்கள் கொடுத்த ரெண்டாயிரத்தை செல் எழுதின மாதிரி எழுதிவிட்டால் போகிறது" என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்து விட்டான் சுப்பையா.
பெருமாள் பிள்ளை அவன் போன திசையையே கொஞ்சம் நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். நிதானமாகத் திரும்பி வெளி வாசலுக்கு வந்து தெருவைப் பார்த்துக்கொண்டு சற்று நேரம் நின்றார். எதிர் வீட்டுப் பாட்டி தூத்தூ என்று துப்பி உடம்பை வில்லாக வளைத்துக் கொண்டு தலையை வேறு திசை திருப்ப முயற்சித்துக் கொண்டிருந்த குழந்தைக்கு வாயில் பலவந்தமாக சோற்றையூட்டிக் கொண்டிருந்தாள். அவள் நின்ற குறட்டருகில் இரண்டு சொறி நாய்களும் ஒரு பசுவும் காலி எச்சில் இலைக்காக வாதம் நடத்திக்கொண்டிருந்தன. மோட்டுக் காக்காய், திடீரென்று பாய்ந்து கிண்ணத்து நெய்ச் சோற்றில் ஒரு கவளம் அடித்துக்கொண்டு உயரப் பறந்தது. "ஏ! நீ கட்டை மண்ணாப் போக" என்றுகொண்டே கிண்ணத்துச் சோற்றை வரட்டு நாய்களுக்கு வீசிவிட்டு உள்ளே நுழைந்தாள் ஆச்சி. பெருமாள் பிள்ளை, வராண்டாவில் உள்ள மாடிப்படி வழியாக மத்தியானத் தூக்கத்துக்கு கட்டிலை நாடினார்.
"ஏலே ராசையா" என்று தீனக்குரல் பெட்டகசாலையிலிருந்து கேட்டது.
"என்னம்மா" என்றுகொண்டு உள்ளே ஓடினான் சுப்பையா.
'அவுகளுக்கு என்ன வேணுமாம்" என்றாள் தாயார்.
"நானும் அவுங்களைப் போல தாசில் உத்தியோகம் பாக்கணுமாம். அந்தப் பவுசைப் பாக்காமே அவுகளுக்கு கண்ணொரக்கம் வருதில்லை" என்றான் சுப்பையா.
"இங்க கெடக்கதைக் கட்டி ஆண்டாப் போதாதா. இன்னம் எதுக்கு கைகட்டிச் சேவுகம். அதிருக்கட்டும் ஒம் பிரியம் எப்படி" என்றாள் தாயார்.
"எம் பிரியத்தை கேக்க இங்க யாருக்கு காதிருக்கு" என்றான் சுப்பையா.
இருவரும் சற்று மவுனமாக இருந்தார்கள்.
"கருப்பையா இண்ணக்கி இங்கெ வந்தானா" என்றாள் தாயார்.
"அவனை விடியன்னை முதக்கொண்டு இந்தத் தெசையிலெயே காங்கலியே' என்றான் சுப்பையா.
"உங்கப்பா சாயந்திரமா சவுக்கைக்கு போன பொறவு அவனைப் பாத்து கூட்டிக்கிட்டு வா" என்றாள் மயிலம்மை, இவ்வளவு பேசுவதற்கு
750
அன்னை இட்ட தீ