தொடர்பும் பிடித்துப் போனது மாமனாருடைய கோபத்துக்கு அவரை ஆளாக்கியது. ஷெல்டன் ஆன் ட்வீட் என்ற ஊரில் லிபரல் கட்சி அபேட்சகராக நின்றார். வெற்றி பெற்றார். பிறகு ஊரில் குடிபுகுந்தார். ஊர்க்காரர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும்படி நடந்து கொண்டார். காமன்ஸ் சபை ஸ்தானம் உறுதியாயிற்று. தேர்தல்கள் என்பதெல்லாம் எப்போதோ ஒரு தடவை எழுந்திருந்து சற்று நாற்காலியைத் துடைத்துக்கொண்டு உட்காரும் வியவகாரமாயிற்று. தொகுதிக்கே வ்வாட் பர்டர்ட் தொகுதி என்ற பெயர் வந்தது. ஷெல்டன் ஆன் ட்வீட் தொகுதி என்ற ஒன்று இருக்கிறது என்ற விஷயம் காமன்ஸ் சபை தொகுதிவாரி ஜாப்தாவில்தான் உண்டு. மற்றப்படி எவரட் பர்டர்ட் தொகுதிதான். காமன்ஸ் சபையின் சாசுவத மெம்பராக இருந்துவந்த எவரட் பர்டர்ட்டின் கட்சி பக்தி அவருக்கு ஒரு ஸர் பட்டத்தை வாங்கிக் கொடுத்ததுதான் மிச்சம். கடைசி மகன் ஜான் எவரட் பர்டர்ட் வெள்ளைக்காரர்களின் புத்திரர்கள் நாலெட்டுத் திக்கிலும் சென்று வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் என கருதவேண்டிய நாகரிக வசதிகள் எல்லாம் பெறுவதற்கு முற்படும்போது ஆப்பிரிக்காவில் போயர் யுத்தம் முடிவடைந்த சமயம். ஐ.ஸி.எஸ். பரீட்சை பாஸ் பண்ணிவிட்டு சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷ் ஆட்சியைக் காத்து நிற்க உத்தரவு வாங்கி வரும்போது ஹோம் ரூல் இயக்கம் பிரமாதப்பட்டது. ஹோம் ரூல் என்ற வார்த்தை சொல்லுகிறவர்களும், வந்தே மாதரம் என்ற வார்த்தையை உச்சரிக்கிறவர்களும் ஜெயிலுக்கு போக வேண்டும். அன்னி பெஸண்டின் பிரசங்கத்தை பத்தி பத்தியாய் இங்கிலீஷில் படித்தார்கள்; சந்தர்ப்பம் கிடைத்தால் போய்க் கேட்டார்கள். அவளுடைய இங்கிலீஷ் நடையைப் பற்றி மெச்சினார்கள். சனாதன பக்தியைப் புகழ்ந்தார்கள். கிடைத்த உத்யோகத்தை விட்டு, மேலுத்யோகத்துக்கு போகவும், புது உத்யோகம் தேடவும் காக்காய் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் காலத்தில்தான் ஸ்ரீ ஏ. யு. பெருமாள் பிள்ளை தம் தாலுகா எல்வைக்குள் நிர்த்தாட்சண்யமாக யூனியன் ஜாக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டிருந்தார். முதல் முதலாக சப் கலெக்டராக நியமிக்கப்பட்ட ஜான் எவரட் பர்டாட்டுக்கு ஸ்தல நிர்வாக நெளிவு சுளுவுகளும், வா, போ என்ற பதப் பிரயோகமும் கற்றுக்கொடுத்தது டன் கணக்கனும் மணியமும் சேர்ந்துகொண்டு சர்க்காரை எப்படி ஏமாற்றக் கூடும் என்பதைச் சொல்லிக் கொடுத்ததுடன் கணக்கனும் மணியமும் ஒன்று சேர்வது என்பது சூரிய சந்திராள் சேர்ந்து உதயமாவதற்கு சமம் என்றும் சொல்லிக் கொடுத்துவிட்டார். பிறகு எவரட் பாடாட் அதிகாரம் பண்ணுவதற்குக் கேட்பானேன். முதலில் தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பது போல பெருமாள் பிள்ளையையே 'எக்ஸ்பிளனேஷன்' கேட்டான். விவகாரத்தை சீக்கிரம் கற்றுக்கொள்ளும் சக்தி எவரட் பர்டாட்டுக்கு உண்டு என்பதைத்தான் இந்த 'எக்ஸ்பிளனேஷன்' தடபுடல் காட்டியது. பெருமாள் பிள்ளை, பெரிய பெருச்சாளி; அவ்வளவு லேசில் பொறிக்குள் மாட்டிக்
758
அன்னை இட்ட தீ