வந்துள்ளன.
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:
மணிக்கொடியில் இக்கதை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பிரிவுகள் 'முன்னுரை' எனவும், அடுத்த இரண்டு பிரிவுகள் இரண்டாம் பகுதியாகவும், அடுத்த மூன்று பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும், அடுத்த மூன்று பிரிவுகளில், பின்னிரண்டு பிரிவுகள் ஒரே பிரிவாகச் சேர்க்கப்பட்டு நான்காம் பகுதியாகவும், கடைசி ஐந்து பிரிவுகள் ஐந்தாம் பகுதியாகவும் வெளியாகியுள்ளன. முதல் மூன்று பகுதிகளின் தொடக்கத்திலிருந்த பாடல் வரிகள் நீக்கம் பெற்றுள்ளள.
முதல் பகுதி:
- உழவையும் தொழிலையும் நிந்தனை செய்வோம்
- உண்டுகளித் திருப்போர்க்கு வந்தனை செய்வோம்
—பாரதியல்ல: உண்மை
இரண்டாம் பகுதி :
- ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
- ஓடியக் காண்பது நங்கையர் உள்ளம்.
மூன்றாம் பகுதி :
- புண்பூத்த மேனி, புகைமூண்ட உள்ளமடா. அவள்
- மண்பூண்ட பாபம், நம் மதிமூத்த கோரமடா.
(1) ப. 286, 14ஆம் வரி : சுடலைமாடனுக்கு "உயர்திரு" என்ற அடைமொழி நீக்கம் பெற்றுள்ளது.
(2) ப. 289, 3ஆம் பத்தியின் கடைசியில், "மருதி ஒரு இளம் பெண்" என்ற வரி நீக்கம் பெற்றுள்ளது.
(3) ப. 290. 2ஆம் பத்தியின் இரண்டு வாக்கியங்களுக்கு இடையில் "கவலையின்மையும் கோடை மழைபோல் வந்து மறைந்தது" என்ற வாக்கியம் நீக்கம் பெற்றுள்ளது.
(4) ப. 291,3ஆம் பத்தி, 8ஆம் வரியில் "... கைமேல் காசு!" என்பதற்குப் பிறகு "அதாவது வாழ்க்கையை நடத்துவதற்கு கூலியில் ஒரு பகுதி" என்ற தொடர் நீக்கம் பெற்றுள்ளது.
(5) ப. 301, கடைசி வாக்கியம், "சுப்பனின் திருவிளையாடல்கள் எப்படியிருந்தாலும் அவை அடிக்கடி நடக்கும் - மருதியின் பேச்சை யாராவது எடுத்தால் அவர்கள் கதி அதோகதிதாள்" என்று அமைந்துள்ளது.
(6) ப.302. 1ஆம் பத்தி, 2ஆம் வாக்கியம், "வாட்டர் பாலத்திலேயே பதிநான்கு வருஷங்களைக் கழித்தாய் ஒருவரும் களங்கமற்றவராக- மானஸீகமாசுவாவது இருக்க முடியாது" என்று அமைத்துள்ளது.
53. டாக்டர் சம்பத்
முதல் வெளியீடு : மணிக்கொடி, 14.4.1935 (மூலபாடம்)
புதுமைப்பித்தன் கதைகள்
807