பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/815

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிப்பெடுத்தேன். இப்பதிப்புக்கென அவ்விதழைப் பார்வையிட அணுகியபோது, அவர் அனுமதி மறுத்துவிட்டார்.

கதைக்கோவையில் வெளியான வடிவம் பிழை மலிந்ததாகவும், ஒரு உரையாடல் பகுதி இடம் மாறியும், பெயர்கள் குழம்பியும் உள்ளதால் ஆறு கதைகள் மூலபாடமாகக் கொள்ளப்பட்டது.

75. கொன்ற சிரிப்பு

முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர் : தெரியவில்லை
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)

புதுமைப்பித்தன் கதைகள் நூலில் இடம்பெற்றதால் 1940 பிப்ரவரிக்கு முன்பு வெளியானதென்று கொள்ளப்பட்டது.

76. பொய்க்குதிரை

முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல்: ஆறு கதைகள் (மூலபாடம்)

ஆறு கதைகள் நூலில் இடம்பெற்றுள்ளதால் 1941க்கு முன்பு வெளியானதென்று கொள்ளப்பட்டது.

77. கருச்சிதைவு

முதல் வெளியீடு : தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல்: ஆறு கதைகள் (மூலபாடம்)

ஆறு கதைகள் நூலில் இடம்பெற்றுள்ளதால், 1941க்கு முன்பு வெளியானதென்று கொள்ளப்பட்டது.

78. சொன்ன சொல்

முதல் வெளியீடு : தெரியவில்லை
புனைபெயர் : தெரியவில்லை
நூல் : புதிய ஒளி (மூலபாடம்)

புதிய ஒளி நூலில் உள்ள தகவலின்படி இது 1941இல் வெளியானதென்று கொள்ளப்பட்டது.

79. மகாமசானம்

முதல் வெளியீடு : கலைமகள், டிசம்பர் 1941
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: காஞ்சனை (மூலபாடம்)
பாடவேறுபாடு:

(1) ப. 494, 3ஆம் பத்திக்குப் பிறகு "அவசரமயம் ஜகத்' என்ற தனி வரி நீக்கம் பெற்றுள்ளது.

(2) ப. 497, 2ஆம் பத்தி: "தன்னுடைய கையில் உள்ள கற்பனை டம்ளரைப் பிடித்தபடி" என்ற தொடர் "'மெதுவா, மெதுவா' என்றது" என்பதற்கு முன்பு நீக்கம் பெற்றுள்ளது.

80. காஞ்சனை

முதல் வெளியீடு : கலைமகள், ஜனவரி 1943

814

பின்னிணைப்புகள்