புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி
95. கயிற்றரவு
முதல் வெளியீடு : காதம்பரி, ஏப்ரல் 1948
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: கபாடபுரம் (மூலபாடம்)
திரு. பொள்ளாச்சி நசன் அவர்களிடம் உள்ள காதம்பரி தொகுப்பை 1997இல் பார்த்து மேற்படிச் செய்திகளைக் குறித்துக்கொண்டேன். இப்பதிப்புக்கென அதைப் பார்வையிட அணுகியபோது, திரு. நசன் அனுமதி மறுத்ததால் கபாடபுரம் நூலில் உள்ள பாடம் கொள்ளப்பட்டது.
96. 'இந்தப் பாவி'
முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல்: சித்தி, ஸ்டார் பிரசுரம், 1955 (மூலபாடம்)
97. இலக்கிய மம்ம நாயனார் புராணம்
முதல் வெளியீடு: தெரியவில்லை
புனைபெயர்: தெரியவில்லை
நூல் : சித்தி, ஸ்டார் பிரசுரம், 1955 (மூலபாடம்)
98. சிற்றன்னை
முதல் வெளியீடு : காதம்பரி, ஏப்ரல்-மே 1949
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: சிற்றன்னை (மூலபாடம்)
99. அன்னை இட்ட தீ
மூலபாடம்: புதுமைப்பித்தனின் கையெழுத்துப் படி
நூல் : அன்னை இட்ட தீ
இதன் கையெழுத்துப் படியை ஒளிநகலெடுக்கக் கொடுத்த தொ.மு.சி. ரகுநாதன் வழங்கிய குறிப்பு (அன்னை இட்ட தீ, காலச்சுவடு பதிப்பகம், 1998, ப. 25-26):
புதுமைப்பித்தன் கதைகள்
817