பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/826

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலச்சுவடு பதிப்பகம் 1998இல் புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத / தொகுக்கப்படாத படைப்புகளை ‘அன்னை இட்ட தீ' என்ற தலைப்பில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து புதுமைப்பித்தனின் அனைத்துப் படைப்புகளையும் காலச்சுவடு பதிப்பகம் தொடர்ந்து கொண்டுவருகிறது. இந்த முதல் தொகுப்பில் புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும் இடம் பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்பில் கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாட வேறுபாடுகள் முதலானவை இடம் பெறுகின்றன. பல்லாண்டு கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது. ISBN 81-87477-01-6 பதிப்பகம்