பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இதைத் தவிர தெரியாதே. நீயாவது சொந்தமா ஏதும் அடிச்சு விடுவாய்" என்றான் ராமசாமி.

"மிஸ்டர், ஒங்க நம்பர் என்ன?" என்றான் நடேசன்.

"உம்முடையதைச் சொல்லுமேன்" என்றார் சண்முகம்.

"நமக்கு கோளாத்தான்!" என்றான் நடேசன்.

"அதென்ன ஜோஸியம்?" என்றான் ராமசாமி.

"நம்பரில் உள்ள எண்களைக் கூட்டினால் ஒற்றை நம்பராக 1, 3, 5 உள்ளதாக வந்தால் பாஸ். இல்லாவிட்டால் கோளா?"

"என்னுடையது 8700" என்றான் ராமசாமி.

"கொளுத்திவிட்டீர். 'கிளாஸ்' தான். அப்பவே சொன்னேனே!" என்றார் நடேசன்

"என் நம்பர் 7743" என்றார் சண்முகம்.

"உமக்குப் பாஸ்தான், சந்தேகமா?"

"மிஸ்டர் நடேசன், உம்ம நம்பர் என்ன?"

"அப்பவே சொன்னேனே கோளா என்று."

"சொல்லுமையா. எங்கே இங்கு கொடும்" என்று ஹால் டிக்கெட்டைப் பிடுங்கிப் பார்த்தார்கள்.

நடேசன் நம்பர் 7744.

மூவரும் ஹோட்டலுக்குள் சென்றார்கள்.

2

ஒரு வாரம் கழித்து.

பரீட்சை தினம். பட்டம் பெறுவதற்கோ அல்லது திரும்பப் பணங்கட்டி அதிர்ஷ்ட தேவதையை வரிக்க முயலுவதற்கோ ஏற்பட்ட திருநாள். கிண்டிக்கும் சர்வகலாசாலைக்கும் ஒரே விதமான நியாயம், ஒரே விதமான போட்டி ஜயிக்கும்வரை அல்லது பணம் இருக்கும்வரை, வரையாது கொடுக்கும் வள்ளல்களாக இருக்க வேண்டும். அதுவும் தினம் சராசரி வருமானம் 0.1.3வாக இருக்கும் இந்தியப் பெற்றோரின் குழந்தைகள்.

நடேசன் கோஷ்டியார் வாசித்துவந்த கலாசாலையில் காலை எட்டு மணியிலிருந்தே ஆர்ப்பாட்டம். உண்மையில் கலாசாலை மைதானத்திலும் வராந்தாவிலுமே இந்த அமளி, இரைச்சல்.

உள்ளே பரீட்சைப் புலியைப் பத்து மணிக்கு மாணவர்களுக்காகத் திறந்துவிடுவதற்காகவோ என்று எண்ணும்படி, கதவுகள் சிக்கென்று அடைக்கப்பட்டிருந்தன. கலாசாலை வேலைக்காரன் பொன்னுசாமி - வேலைக்காரன் என்றால் பொன்னுசாமிக்குக் கோபம் வந்துவிடும்! 'பியூன்' என்று சொல்லவேண்டும் - ரைட்டர் அய்யரைப் பின்பற்றி ஒரு பெரிய காகித மூட்டையை எடுத்துச் செல்லுகிறான். உள்ளே

96

நிகும்பலை