பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-17 6 இல் தன் திசைக்கே சென்" ஐந்து விரட்டx 48? இன்நல்லோ கம்பன் இறந்த நாள்; புன்கவிதை இன்றல்லோ ராச சபைக்கு ஏற்குநாள்-இன்றல்லோ பூமடந்தை வாழ, புவி மடந்தை வீற்றிருக்க, நாமடந்தை நரல் வாங்கும் நாள்! கவிச் சக்கரவர்த்தி கம்பன் இறந்துபட்டபோது ஒரு கவிஞன் பாடி:பதாக வழங்கப்படுகிறது, இந்தப் பாட்டு. ஒரு முறை புதுமைப்பித்தன் இந்தப் பாட்டைக் கம்பனே தான் பாடியிருக்கிறான் என்று என்னிடம் வாதித்தார்;; சாதித்தார். அவரது வாதம் என்ன தெரியுமா? சரஸ் வதியின் தாலிப் பாக்கியம் தறிபட்டுப் போயிற்று என்று நாக்கில் நரம்பின்றிச் சொல்ல அவன் ஒருவனுக்குத்தான் துணிச்சலும், கலைத்தேவியிடம் "அத்தனை தோழமை உணர்ச்சியும் உண்டு என்பதே. “தனது கவிதையின் மேலதா விலாசம் உணரப்படாமல் போவதையும், அதே வேளையில் வறட்டு வெள்ளைக் கவிகள் அம்பலமேறி அட்டகாசம் புரிவதையும் கம்பன். தன் ஆயுட் காலத்திலேயே அனு பவித்திருப்பான்; அந்த வயிற்றெரிச்சலின் - காரணமாக அவனே. : இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறான்' என்று தர்க்க நியாயம் பேசினார் புதுமைப்பித்தன். இதை வலியுறுத்துவதற்குப் புதுமைப்பித்தனுக்கு ஒரு சந்தர்ப்பமும் . கிடைத்தது. 1946-ம் வருஷம் திருச்சி வானொலி நிலையத்தார் புதுமைப்பித்தனை 'பாட்டு எப்படிப் பிறக்கிறது?' என்ற பொருள் பற்றிப் பேச அழைத்தார்