பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-18 குடும்பமும் குழந்தையும் Bாதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்' என்ற கதை ஞாபகமிருக்கிறதா? அதில் வரும் கதாநாயகர் பிரம நாயகம் பிள்ளையைப்பற்றிப் புதுமைப்பித்தன் பின்வரு 'மாறு குறிப்பிட்டிருக்கிறார்:

  • '... (பிரமநாயகம் பிள்ளை) வாழ்வின் மேடுபள்ளங்

களைப் பார்த்திருக்கிறார் என்றால் அவர் ஏறிய சிறு சிறு மேடுகள் யாவும் படிப்படியாக இறங்கிக்கொண்டே வரும் பள்ளத்தின் கோளாறுகளே யாகும். வாழ்வு என்ற ஓர் அனுபவம் அவருக்கு ஏற்படும்போது அவர் மேட்டிலிருந்து தான் புறப்பட்டார்.* புதுமைப்பித்தன் திருநெல்வேலியை விட்டு, த 'மது பிறந்த வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து, பிரம் நாயகம் பிள்ளையைப் போலத்தான் வாழ்க்கையை அனுப் வித்தார் என்று சொல்ல வேண்டும். வாழ்க்கை முழுவதும் சுக வாழ்க்கைக்கு உத்தரவாதமோ நம்பிக்கையோ தராத மத்தியதர வர்க்கத்தின் கஷ்ட நஷ்டங்களும், பொருளா தாரச் சங்கடங்களும் அவரது வாழ்க்கையைப் பாதித்தே வந்தன. எனவே சிரம ஜீவனம் நடத்தும் ' மத்தியதர வர்க் கத்தின் குடும்ப வாழ்வைப் போலவே புதுமைப்பித்தனின் குடும்ப வாழ்வும் இருந்து வந்தது.

  • *எழுத்தாளனைக் கட்டிக் கொள்பவள் துணிச்சல்

காரியாகத்தான் இருக்கவேண்டும்! என்று நண்பர்