பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பமும், குழந்தையும் 109 அத்தான் வரும். தகவணை சொல்லுகிறவனைக் கண்டு எனக் குக் கோபம் வரத்தான் செய்கிறது, உனக்குக் கோபப் 1.Jட உரிமையுண்டு. நான் அப்படி - அவனிடம் செய்ய முடியுமா? அது செல்லாத இடத்தில் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். அந்த மாதிரி நான் பொறுத்துக் கொண்டுதான் வருகிறேன். ஆனால் நீதான் நாளுக்கு நாள் சின்னக் குழந்தையாகி வருகிறாயே! , ஒழிய வளர்ச்சி தென் படவில்லை. நீ என்னதான் கோபப்பட்டுக் கொண்டிருந் தாலும், எப்படியோ முக்கித் தக்கி உனக்கு ஏற்படுகிற கோபம் முடிகிறதில்தான் எனக்குச் சந்தோஷம். காலைக் காலைப் போட்டு உதைத்துக் கொண்டு முகத்தில் துப்பிக் கிள்ளித் துள்ளி மறியும் ஒரு குழந்தையை மடியில் இருத்தி அமுக்கிப் பிடித்துக் கொண்டு முத்தமிடுகின்ற சுகம் அதில் இருக்கிறது. என்ன மாதிரி நீ கோபப்பட்டாலும் அது அந்த நிமிஷத்துடன் போச்சு........” . புதுமைப்பித்தனுக்குக் கு ழ ந ன த க ள் என்றால் மிகுந்த பிரியம். குழந்தைகளின்மீது, அவருக்குள்ள ஈடு பாடும் ஆனந்தமும் அளவிட முடியாதது. புதுமைப் பித்தன் குழந்தைகளிடம் எவ்வளவு தூரம்' ஈடுபட்டிருந் தார் என்பதை அவரது கதைகளில் வரும் குழந்தைப் பாத்திரங்கள் - குறிப்பாக , 'சிற்றன்னை” என்னும் நூலி லும், 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்ற கதையி லும் வரும் குழந்தைப் பாத்திரங்கள்- மூலம் நாம் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும், ஆனால் குழந்தைகளிடம் இத் தனை ஆர்வம் காட்டும் புதுமைப்பித்தன், தமது வாழ்க்கை யில் பெற்று, வளர்த்துச் சீராட்டிய குழந்தைகளைவிட, பெரியாழ்வார் . கண்ணனைப் பாசுரங்களால் சீராட்டிய மாதிரி, கதைகளிலே சீராட்டிய குழந்தைகள்தான் அதி கம் எனச் சொல்ல வேண்டும், புதுமைப்பித்தன் இன்று. விட்டுச் சென்றிருக்கும் ஒரே குழந்தை தின கரி என்ற பெண். குழந்தை. ஆனால் அவருக்கு தினகசி - பிறப்பதற்கு முன்பு ஆணும் பெண்ணுமாக இரண்டு வாரீசுகள் பிறந்த போதிலும் பிறந்த சிறிது காலத்திலேயே அவை மறைந்து விட்டன.