பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம்-19 56{சோ ? துமைப்பித்தனைப் பெரும்பாலான வாசகர்கள் அவரது கதைகளின் மூலமே அறிந்திருக்கிறார்கள். அவர் எப்படி இருந்தாள், ஆள் எப்படிப் பட்டவர் என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அவரது இதயத்தைக் கதைகளிலே. கண்டு களித்த வாசகர்கள் பலருக்கு, நேரிலும் அவர் எப்படி இருந்தார் என்பதை அறிய ஆவல் எழுவது தர்ம விரோதமல்ல. எனக்கும் ஒரு காலத்தில் அந்த மாதிரி ஆவல் எழுந்ததுண்டு. எனவே இந்தப் பகுதியில் புதுமைப் பித்தன் எப்படி இருந்தார், எப்படிப் பழகினார், அவரது குணநலங்களும் குணதோஷங்களும் என்ன என்பதை ஓரளவு கூறுவதே என் முயற்சி. புதுமைப்பித்தன் நிதானமான உயரமுள்ளவர். சுமார் ஐந்தே முக்கால் அடி உயர மிருப்பார். ஆனால் உயரத்துக் குத்தக்கபடி உடம்பில் சதைப் பிடிப்பு கிடையாது. மிகவும் ஒல்லியான சரீரம். தொளதொளத்துத் தொங்கும் வெள் ளைக் கதிர் ஜிப்பாதான் அவரது உடலின் ‘ஒட்டெலி'த் தன்மையை மூடி மறைத்துக் கொண்டிருக்கும். ஒடிசலான, கீரைத் தண்டு போல் மெலிந்த உடல். தலைமயிரை அதிக மாக வளர்த்துப் பின்புறமாகச் சீவி விட்டிருப்பார். ஆனால் அவர் தலைமயிரைச் சீவிவிட்ட சிறிது நேரத்துக் கெல்லாம் அது கலைந்து போய்விடும். அவரது தலைமயிர் குத்திட்டுச் சிலிர்த்து நிற்கும் முரட்டு ரோமம் அல்ல. தொய்வும் மென்மையும் பொருந்திய பிள்ளைமுடிதான். இருந்தாலும் அவர் தாமே' தன் தலைமயிரைக் கலைத்து விட்டுக் கொள் வார். மெலிந்து பிஞ்சாய் இருக்கும் தமது கைவிரல்களால் அடிக்கடி தலைமயிரைப் பின்னோக்கிக் கோதி விட்டுக்கொள்