பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் துரிச் சுருக்கங்கள் அரைது கண்கள் கிடத்து வார். எனவே அவரது கிராப் வரிசை குலைந்து தோள் தொனத்துச் சரிந்து கிடக்கும், அதில் இங்கும் அங்குமாக வெள்ளிய நரை லேசாகப் புரையோடிப் போயிருக்கும். அகலமான நெற்றி; எனினும் பாளம் பிளந்த கரிசல் காட் டைப்போல் நெற்றியில் கீறல் விழுந்த மாதிரிச் சுருக்கங்கள் L.டிந்திருக்கும். அவரது கண்கள் கடலாழத்தின் மடியிலே கிடந்து புரளும் முத்துக்களைப்போல் ஆழக் குழிக்குள் அமிழ்ந்து கிடந்து ஒளி வீசும் கண்கள். கண்களிலே ஏதோ" ஒரு ஏக்கம் கலந்த வெறி தெறிப்பதுபோல் தோன்றும்; லேசாகக் கிழடு தட்டிப்போன பிரமை தட்டுப் படும். அவரது கண்களை 'போரிஸ் கார்லோல்* கண்கள் என்று சொல்லவேண்டும்; போரிஸ் கார்லோவின் கண்கள் எப்படி இருக்கும் என்று தெரியாவிட்டால், புதுமைப்பித்தன் மொழிபெயர்த்துள்ள 'பிரேத மனிதன்' என்ற புத்தகத்தின் முதற்பதிப்பு அட்டைப் படத்தில் உள்ளதைப் போல், 'ஆனால் கொஞ்சம் அமித ஒளி நிறைந்த கண்கள் என்று சொல்ல லாம். கண்களிலே தீராத ஏக்கமும் பித்தமும் ஒளியும் தீகூஷண்யமும், நிறைந்திருக்கும். . சில பேருடைய, 'கண்களை எவ்வளவு நேரமானாலும் கண்கூசாமல் ' பார்த்துக் கொண் டிருக்கலாம். புதுமைப்பித்தனின் கண்களை அப்படிப் பார்க்க முடியாது. அதன் பார்வை பார்க்கிறவர்களின் கண்களைச் சீக்கிரம் உறுத்தி விடும், அவரது மூக்கு சிறி தளவு ஏந்திட்டாற்போல் நிமிர்ந்து தோன்றும். அவரது பற்கள் மிகவும் பெரியவை. வெற்றிலைக் காவியேறிக் கறுத் துப் - போகாவிட்டாலும், பளபளப்பு இழந்து மஞ்சள் L>ாசித்திருக்கும் பெரிய பற்கள். 'எனக்குப் பல் முளைத்த மாதிரி, மாவிலைகள்) கோணல் மாணலாகத் தொங்கின் என்று அவர் 'விநாயக சதுர்த்தி' என்ற கதையில் எழுதி யிருக்கிறாரே, அதை நீங்கள் நம்பிவிடக் கூடாது. மாவிலை 8ளைப் போல் வெளியே தெரியும் நீண்ட பற்கள்தான்; என் றாலும் கோணல் மாணலாக இராது, அவரது உதடுகள். பெரியவை. கீழுதடு மிகவும் தடித்துப்போன உதடு, அதிலும் வெற்றிலையைப் போட்டுப் போட்டு, கீழுதடு மேலும் நடிப்பேறி, ஒரளவு சரிந்து தொங்குவது போலிருக்