பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசங்கி 147 தலைவர்-உங்க வாத்தியார்- இவர், நான், கி. ரா.,. எல் லோரும் சென்னை மூக்கர் நல்ல முத்துத் தெருவிலே... என்று ஆரம்பித்தார். பிறகு அங்கு அவர்கள் வெற்றிலை போட்டு வெளியே எச்சில் துப்பியது, இலக்கிய சர்ச்சை பண்ணியது என்று சம்பந்தா சம்பந்தமற்றுப் பேசிக் கொண் டிருந்தார். 'மூக்கர் நல்லமுத்துத் தெருவிலே...' என்று ஆரம்பித்த புதுமைப்பித்தன் அப்புறம் வந்திருந்தவர்களோடு சம்பா ஷிக்கவே ஆரம்பித்து விட்டார். வந்திருந்தவர்கள் குறுக் கிட்டுப் பேசாததால் அவரது பேச்சும் *பிரசங்கம்' என்ற) அந்தஸ்தைத் தானே பெற்றுக் கொண்டது. மேடைமீது நின்ற புதுமைப்பித்தன் பேசிக் கொண்டே, குஸ்திக்குக் கிளம்பப் போவது மாதிரி ஜிப்பாக் கைகளைத் திரைத்துச் சுருட்டிக் கொண்டார். தலைமயிரைக் கோதி விட்டுக் கொண்டார்; 'ஸைட் பாக்கெட்டுக்குள் இருந்த கட்டம்போட்ட வெள்ளைக் கைக்குட்டையை எடுத்து உதறினார்; உரு வினார்; “பட்டணம் சோமாறி’ மோஸ்தரில் அதைக் கழுத்தில் கட்டி ஒரு 'கிறிக்கி' முடிச்சுப் போட்டுக் கொண்டார்; மேஜை விளிம்பின்மீது ஏறி உட்கார்ந்தார்; குதித்து இறங்கினார்; சிரித்தார். இத்தனைக்கும் நடுவிலே அவர் தாம் பேச ஒப்புக்கொண்ட பொருளான **புதுமைப்பித்தன் கதைகள் என்பதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார், “'என்னமோ அதை எழுதக்கூடாது, இதை எழுதக் கூடாது. அப்படீன்னு பாத்தி கட்டிப் பூச்சி புடுக்கிறாகனே. அவுஹளுக்கு நம்ம கதை பிடிக்காது. நான்தான் கேக்கிறேன். ஏன்யா? எதை எழுதினா என்ன? அதுக்குக்கூட எனக்குச் சுதந்திரம் கிடையாதா? பெரியவுஹ சொல்றாஹங்கிறத்துக் காக உண்மையை மறைக்க முடியுமா? கருவைத் தடை செய்யலாம்; கருத்தைத் தடை செய்ய முடியுமா? புதுமைப்பித்தன் இப்படிக் கூறிவிட்டு ஒருகணம் நின்ருர்; பிறகு தொடர்ந்தார்! 1:-