பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 புதுமைப்பித்தன் கேளப்பா, அது ஒரு பாட்டு என்று கூறிக்கொண்டு ஒரு வெண்பாவை, தாம் இயற்றிய வெண்பாவைக் கூறத் தொடங்கினார். முதல் இரண்டு அடிகளில் இன்னார் இன்னாரை இலக்கிய கர்த்தா என்று பாராட்டிய விஷயம்தான் பாட்டின் கருத்து. அந்த அடிகளை ஒரு பெண் பிள்ளை சொன்னாளாம்; உடனே அதைக் கேட்ட அடுத்த பெண் பின்வருமாறு பதில் சொன்னானாம். -'ஆமக்கா ! பப்படத்துக் காரி பார்வதியின் அத்தை மகன் அப்படித்தான் சொன்னாள் அன்னைக்கி' என் குறைப்பாட்டையும் கூறி முடித்தார் புதுமைப்பித்தன். “ இலக்கணம் சரியில்லையே? என்றேன் நான். "பப்படம் - விற்கிறவளுக்கு இலக்கணம் தெரியுமா? என்று சொல்லிவிட்டு, இவர்கள் சொல்கிற அபிப்பிராயத் துக்கும், ரோட்டில் போகிற எவளோ ஒரு பெண் சொல்கிற அபிப்பிராயத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது, வா", போவோம் என்றார் புதுமைப்பித்தன். ஒரு பொதுக்கூட்டத்துக்குச் சென்றுவிட்டு வெளியே வந்த சமயம் எங்களோடு ஒரு எழுத்தாளரும் வந்தார். எழுத்தாளர் என்றல் :கதை எழுதுவாரோ , என்னவோ? ஆனால் எழுத்தாளர்களின் கற்பனைச் சுரங்கமான (1) மது, மாது இரண்டிலும் திளைத்த ஆசாமி அவர். அப்போது எங்களுக்குத் தெரிந்த ஒரு புத்தக வியாபாசி தம் மகளுடன் முன்னே போய்க் கொண்டிருந்தார். அதைக் கண்ட எழுத்தாளர். புதுமைப் பித்தனைப் பார்த்து, ""அதோ-அவருடன் போகிறாளே', அவள் யார்? மகளா? என்று கேட்டார். புதுமைப்பித்தன் உடனே, *'பாவம், இதுவா? இது ரொம்பச் சின்னப் பொண்ணு. மகள் இல்லை; அவர் பேத்தி!* என்றார்,