பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில ரசமான ஞாபகங்கள் 155 செர்வர் இட்லியைக் கொண்டு வந்து வைத்தான்; ஆவி வந்து கொண்டிருக்கும் சூடான சாம்பார் தட்டு நிறைய நிரம்பியிருந்தது. புதுமைப்பித்தன்' இட்லியைப் பிட்டார். அது ஆறிப் போன இட்லி. கொதிக்கிற சாம்பாரை அதன்மீது ஊற்றி அதற்குச் சூடேற்றும் வியாபார தந்திரத்தைக் கண்டு விட்டார் புதுமைப்பித்தன். உடனே செர்வரைக் கூப்பிட்டார், என்னப்பா, ஆத்மா குளிர்ந்து விட்டதே! என்றார். செர்வர் விழித்தான். “இல்லை. சாம்பார் தான் சுடுகிறது. இட்லி செத்துப் போச்சே! என்று அதற்கு விளக்கம் கூறினார். புதுமைப்பித்தன். ஒரு சினிமாக் கம்பெனி பிரம்மாண்டமான செலவில் ஒரு படம் தயாரித்தது. ஆனால் படம் முடிந்த பாட்டைக் காணோம். காரணம், அந்தப் படத்தில் புதிய புதிய, அம்சங் களைப் புகுத்தவேண்டும் என்பதற்காக, அப்போதைக்கப் போது வெளிவரும் ஆங்கிலப் படங்களிலிருந்து பல அம்சங். களைக் காப்பியடித்து, தன் படத்தில் புகுத்திக் கொண்டிருந்தது அந்தக் கம்பெனி. இதைப் பற்றிப் புதுமைப்பித்தன் குறிப்பிட்டுச் சொல்லும் போது பின்வருமாறு சொன்னார். கண்ட படத்திலிருந்தும் காப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் படம் வெளிவரும்போது எப்படி இருக்கும் தெரியுமா? குடுகுடுப்பைக்காரன் சட்டை மாதிரி இருக்கும்! * 8, என்றார். அதாவது துண்டுத் துணிகளை ஒட்டவைத்துத் தைத்துக் கோமாளி மாதிரி குடுகுடுப்பைக்காரன் போட்டிருப்பானே அந்த மாதிரி என்பதைத்தான், அதாவது படம் கோ மாவித் தனமான தோல்வியாகப் போகும் என்பதைத் தான், அவர் இப்படிக் குறிப்பிட்டார்.