பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 புதுமைப்பித்தன் திப்பாசிரியர் ஒருவர் புதிதாகச் சில நண்பர்களைப் பிடித்து ஒரு பிரசுராலயம் தொடங்கினார். அந்தக் கம்பெனி டைரக்டர்களின் பெயரோடு அச்சடித்த 'பிராஸ்பெக்டஸ்' வெளிவந்திருந்தது. அந்த டைரக்டர்களின் வரிசையில் அந்தக் கம்பெனிக்கு அதிகமான மூலதனம் போட்டவரின் பெயர் கடைசியில் இருந்தது, இதைக் கண்ட நண்பர் ஒருவர்

  • நிறையப் பணம் போட்டவரின் பெயர் அடியிலே இருக்

கிறதே, ஏன்? என்று கேட்டார், உடனே புதுமைப்பித்தன், *'மேலே இருக்கிற பேர் வழிகளையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்க வேண்டாமா? அதனால்தான் அவர் அடியில் இருக்கிறார்! என்றார். 12. துமைப்பித்தன், தினமணியில் .. வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு அச்சாக வேண்டி புளுபுகன்' பார்வைக்கு வரும். புருபை எவ்வளவுதான் கவன iமாகப் பார்த்துக் கொடுத்தாலும், சமயங்களில் கம்பாஸிட்டர் கள் பிழைகளைத் திருத்தாமல் விட்டு விடுவார்கள். இதைக் கண்டு எரிச்சலுற்ற புதுமைப்பித்தன் சமயங்களில் புரூனப் பார்த்து முடித்துவிட்டு, கடைசியில் 'கடவுள் துணை!' என்று எழுதி விடுவார். கம்பாஸிட்டர் வந்து, 'இதென்ன ஸார்? கடவுள் துணையைக் கம்போஸ் செய்யலா? என்று கேட்டால், இல்லப்பா, நான் என்னால் ஆன மட்டும் பார்த்து விட்டேன். இனி மேலும் தவறு விழுந்தால், "கடவுள் தான் எனக்குத் துணை. நீ அல்ல' என்பதற்குத் தான் அப்படிப் போட்டேன் என்பார் புதுமைப் பித்தன். உனதுமைப்பித்தன் எப்போதும் நெடுநேரம் பேசிக் கொண் டிருப்பார். ஒரு தடவை அவரும் இன்னொரு நண்பரும் இரவில் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்த நண்பர் * * நாம் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தால்?. மணி என்ன 'வே?' என்று கேட்டார்,