பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில ரசமான ஞாபகங்கள்

  • 'அதைப்பற்றி என்ன வே கவலை? நான் காலம் கடந்த

பெருமாள்! என்றார் புதுமைப்பித்தன் , புதுமைப்பித்தன் ‘காலம் கடந்த பெருமாள்' என்று தம் மைச் சொல்லிக் கொண்டாலும் அவரிடம் ஒரு கைக்கடிகாரம் இருந்தது. ஆனால் அவர் அதைக் கையில் கட்டமாட்டார். ஆபீசுக்குச் செல்லவேண்டிய நேரத்தைப் பார்ப்பதற்காக அந்தக் கடிகாரத்தை வைத்திருந்தார். ஆனால் அதில் ஒரு போதும் அவர் மணி பார்ப்பதில்லை! உa Taஞ்சாலங்குறிச்சி கட்டபொம்முவைப் பற்றி ஒரு புத் தகம் வெளிவர வேண்டும் என்று விரும்பினார் புதுமைப்பித்தன். ஒரு பதிப்பாசிரிய நண்பர் சரித்திரப் பரிசயமுள்ள ஒரு எழுத்தா எரைக் கொண்டு அதை எழுதச் செய்து வெளியிட்டார். புத்தகம் வெளிவந்த பிறகு, அந்தப் பதிப்பாசிரியர் ஒரு பிரதியைப் புதுமைப்பித்தனிடம் கொடுத்து, படித்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லும்” என்றார். புதுமைப்பித்தன் புத்தகத்தைப் படித்துப் பார்த்து விட்டுச் சொன்னார்: வே! இது காயடிச்ச கட்டபொம்மு!' புத்தகத்தில் வேகமில்லை என்பதையே அவர் இப்படிக் குறிப்பிட்டார். 'ஒரு கதாசிரியர் ஒரு உருவகக் கதை எழுதி அதை ஒரு பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்; பின்னர் அதே பத்திரிகை வில் அதே உருவகக் கதையின் கருத்தையே ஆதாரமாக வைத்து இன்னொரு எழுத்தாளர் ஒரு பாட்டு எழுதி இருந்தார். இதைப் பற்றிப் புதுமைப்பித்தனிடம் குறிப்பிட்டபோது அவர் சொன்னார்: