பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில ரசமான ஞாபகங்கள் 23RXய்மாலக்காரர்களைக் கண்டால் புதுமைப்பித்தனுக்கும் பிடிக்காது. ஒரு நண்பர் கம்யூனிஸத்தைப் பற்றி சரமாரியாகப் பேசுவார். அவரது உற்சாகத்தில் 'நான் ஒரு கம்யூனிஸ்ட்? என்றும் கூறி தமது கட்சியை எடுத்து ரைப்பார். ஆனால் உண்: மையில் கம்யூனிஸக் கொள்கையில் அவருக்குப் - பற்றுதல் இருந்ததே ஒழிய, அவர் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. புதுமைப் பித்தண்டம் வந்து இந்த நண்பர் ஒரு தட ைவ இதுமாதிரிப் பேசிவிட்டு, நானும் ஒரு கம்யூனிஸ்டுதான்! என்றார். புதுமைப்பித்தன் விடுவாரா? “வே. நீர் உண்மையான. கம்யூனிஸ்டாகி இருந்தால், உம் நாமத்தையும் பூஷாலையும் முதலில் களைந்து 'எரியும்!” என்று ஒரு போடு போட்டார். நண்பர் வெலவெலத்துப் போய் விட்டார்." பிறகு புதுமைப்பித்தன் வர்க்க பேதத்தை ஒழிக்க வேண்டும் என்கிறது கம்யூனிஸம். நீரோ வருண பேதத்தைக் கூட விட மாட்டீர் போலிருக்கிறதே! என்றார், வருண பேதம் என்ற சொல்லில் தொனித்த " சிலேடை நயத்தைக் கண்டதும் அந்த நண்பருக்கே சிரிப்பு வந்து விட்டது , ஒ குமுறை நண்பர் அழகிரிசாமியும், புதுமைப்பித்தனும் நானும், தமிழாராய்ச்சித் தலைவர் எஸ். வையாபுரிப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டுப் போனோம், போகிற வழியில் அழகிரி சாமீ ' ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அந்தச் சமயத்தில் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் வையாபுரிப்பிள்ளை எழுதிய திரு வள்ளுவரைப் பற்றிய கால ஆராய்ச்சி வெளி வந்திருந்தது. அந்த ஆராய்ச்சியைப் படித்த அழகிரிசாமியின் தமிழ்ப்பண்டித நண்பர் ஒருவர், **இந்த வையாபுரிப்பிள்ளையே இப்படித்தான். ஒரே அநியாயம், பழைய தமிழ்ப் புலவர்களின் காலத்தை யெல்லாம் மிகவும் பிற்பட்டதாகவே, கூறுகிறார்' என்று அழகிரிசாமியிடம் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார். வையாபுசிப்பிள்ளையின் ஆராய்ச்சியைப் பற்றி எங்கள் மூவருக் குமே சிறந்த அபிப்பிராயம். 'காய்தல் உவத்தல் இல்லாத