பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் என்ற இரு பாடல்களைப் பொங்கல் நம்பிக்கை' என இ சூட மிட்டு அனுப்பி வைத்தார் புதுமைப்பித்தன். புது எமைப்பித்த னின் ‘நம்பிக்கைக்கு நானும் நாலு வெண்பாக்களில் பதில் அனுப்பினேன். அந்தப் பதிலை இங்கு தெரிவிக்க வேண்டிய தில்லை யல்லவா? 2.துமைப்பித்தனுக்கு ஒரு கொள்கை. அதாவது,

  • எழுத்தாளனுக்கு நிதி திரட்டக் கூடாது. அவள் தன்

எழுத்தினாலேயே பிழைப்பு நடத்த வேண்டும்' என்று சொல்வார். அதைப்போலவே கலைஞான மில்லாத . ஒரு எழுத்தாளனோ' அல்லது 'கவிஞனோ" பரம் தரித்திரனாக இருக்கிறான் என்பதற்காக, அவனுக்குக் , கௌரவம் கொடுத்து நிதி பிரித்துக் கொடுப்பதும் அவருக்குப் பிடிக்கவே, பிடிக்காது. 'ஏனை என்றால், ஏழை என்பதற்காகத் தானம் செய். அவனை ஏன் - கவிஞன் என்றும் எழுத்தாளன் என்றும் கௌரவிக்க வேண்டும்? என்பார்; ஆதலால் அதே புதுமைப்பித்தனை நாம் உயிரோடிருந்த காலத்தில் கெளரவிக்கவில்லை. இருந்தாலும் அவர் . தாமே தமது. கெளரவத்தை எடுத்துக் கூறி, அதே சமயத்தில் தமது ஏழைமையையும் எடுத்துக்கூறி, தமது அந்திம காலத் தில் நிதி கேட்கத் துணிந்தார். அதற்காக அவர் வருத்தப் பட்டிருக்க , வேண்டியதில்லை. கெளரவத்துக்குத் தகுதி யான எழுத்தாளனை வாழவைக்க, எழுதிப் பிழைக்கும் படிச் செய்யத் திராணியற்றுப் போன சமூகம்தான் வருத்தப்பட வேண்டும். எழுத்தாளனுக்கு யாராவது நினைவு நாள் கொண்டாட வேண்டுமென்று சொன்னால், எழுத்தாளனை நல்ல வெள்ளிக் கிழமையாகப் பார்த்து அடித்துக் கொல்லுங்கள். அப்புறம் அந்தச் சுபயோக சுபதினத்தில் வருஷா வருஷம் அவனுக்குப் குருபூஜை பண்ணுங்க'வே 'என்பார் புதுமைப்பித்தன், எழுத்தாளனைப் பாராட்டி அவனது படத்துக்குப் பூமாலை போட்டுப் பஜனை பாடுவதுதான்