பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில சரமான ஞாபகங்கள் 137 அவனைக் கொல்வதற்குச் சரியான வழி என்பார், இது னால்தான் தமது 'காஞ்சனை' என்ற கதைத் தொகுதியின் முன்னுரையில்.... * 'என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட் டிப் பூப்போட்டு மூடிவிடுவதுதான் என்காலை இடறி விடுவ தற்குச் சரியான வழி என்று அவர் எழுதினார். . புதுமைப்பித்தன் ‘எழுத்தாளனை நாம் மனிதப் பிறவி யாகக் கருதவேண்டும். அவனை ஒரு வீரனாக்கி: வீர வணக்கம் செய்து, கல் நாட்டுவதுபோல் அவனைப் பாராட்டி அவனை நம்மைவிட்டு விலக்கி விட்டுவிடக் கூடாது. அவனை நாம் உணர்ந்து, குற்றங்குறைகளைக் கூறி, அவனை மனித குலத் தின் பிண்டமாகத்தான் கருத வேண்டும்' என்றே கருதினார், Kாதுமைப்பித்தனின் ‘நாசகாரக் கும்பல்' என்ற கதை யைப் படித்திருக்கிறீர்களா? அந்தக் கதையை முதலில் புதுமைப்பித்தன் மணிக்கொடிப் பத்திரிகையில் எழுதினார், அப்போதெல்லாம் அவர் முழுக் கதையையும் எழுதிச் சரி பார்த்து அனுப்புவது கிடையாது, முதல் பக்கம் எழுதி முடிந்த வுடன், அது கம்போசுக்கு- அச்சுக்குப் போய் விடும்; இரண்டாம் பக்கத்தை அவர் எழுதுவார்.., எழுத எழுத ஒவ்வொரு தாளும் உடனுக்குடன் அச்சுக்குப் போகும். அத்தனை அவசரம். அவசரத்துக்குக் காரணம், கடைசி நிமிஷத்தில் எழுத உட்காருவது. 'நாசகாரக் கும்பல்' கதையை எழுதியபோது அதில் வரும் 'மருதப்ப மருத்துவனருடைய மனைவி இசக்கியம்மாள் காலமாகி வெகு காலமாகிவிட்டது' என்று எழுதியிருந்தார். கதையின் பிற்பகுதியில் மருதப்பன் அடிபடும்போது, அவரது மனைவி அலறுவதாகவும், மனைவியின் கைத்தாங்கலில் மருதப்பன் சென்றதாகவும், பின்னர் மனைவியும் அவருமாக மதம் மாறியதாகவும் எழுதியிருந்தார். - 'கதாபாத்திரத்தைச் சிருஷ்டித்துக்கொண்டு போகும் போது. சில சமயங்களில் இந்த மாதிரி ஞாபக மறதிக்கு எழுத்தாளர்கள் ஆளாவதுண்டு. எனவே கதையின் ஆரம்