பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீல் ரசமானா ஞாபகங்கள் இதுபோலவே அவர் ஒரு சமயம் ஒரு வேடிக்கைப் பாட்டு சொன்னார், ஒருவன் ஒரு பெண்ணோடு சிநேகமா விருந்தான். அவளோடு நெருங்கிப் பழகிச் சரசங்களாடும் வரையிலும் பழகினான். ஆனால் 'கல்யாணம் பண்ணிக் கொள்' என்றால் மட்டும் தட்டிக் கழித்தான். இதைக் கண்டு அந்தப் பெண் சீறி விழுந்தான். * நீ இந்த மாதிரி நடப்பது சரியில்லை. அம்மா கண்டால் என்னையும் உன்னை யும் கொன்று விடுவாள். போய் விடு' என்று சொன்னன். இதுதான் பாட்டுக்குரியச் சந்தர்ப்பம். பாட்டு பின் வருமாறு: உண்ணா த வப்பெல்லாம் பண்ணி வச்சி, இன்னைக்குக் " கண்ணால மின்னா கசக்குதோ?-அண்ணாத்தே! ஆயாவந் தாலுன்னை அடுப்பில் முரிச்சி வஃப்பwன் போயேன் தொலைஞ்சி போயேன்! இதுபோலவே அவர் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் ஏதாவது விளையாட்டாகப் பாட்டுச் சொல்வார், பாட்டு பரிபூரணமாக இருந்தாலும் இருக்கும்; அரைகுறையாக நின்றாலும் நிற்கும். அவர் பாட்டாகச் சொன்னாலும் சரி, வசனமாகச் சொன்னாலும் சரி; அவரது பாஷை ஈட்டி போலிருக்கும்; அதில் இனிய ஹாஸ்யமும் இருக்கும்.