பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • புதுமைப்பித்தன்' '

1113 பாக்கியம் எனக்கு இதுவரை சித்திக்கவில்லை” என்று ஒரு கட்டுரையில் அவர் வயிற்றெரிச்சலோடு - எழுதியிருக்கிறார். 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற புத்தகம் ஞாபகம் இருக்கிறதா? அதற்கு ரா, ஸ்ரீ. தேசிகன் ஒரு . முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் புதுமைப்பித்தனின் கதைகள் பல வற்றை மேல் நாட்டுக் கதைகளுடன் ஒப்புநோக்கி எழுதியிருக் கிறார். அந்த முன்னுரையை எல்லோரும் ரசித்துப் படித்தனர். ஆனால் முன்னுரைவை விரும்பாத, பாராட்டாத ஒரே ஆசாமி, புதுமைப்பித்தன் ஒருவர்தான்! காரணம், இந்த ஒப்புநோக்கு விவகாரம் தான், புதுமைப்பித்தன் ஒப்புநோக்கு விஷயத்தில் இத்தனை வெறுப்புக் கொண்டிருந்ததால், அவருக்கு வெளிநாட்டுக் கருத் துக்களோ கதைகளோ ஆசிரியர்களோ பிடிக்காது என்பது பெருந்தவறு. அவருக்கு வெளி நாட்டு ஆசிரியர்களைப் பிடிக் கும்; அவர்கள் எழுதிய கதைகளும் பிடிக்கும். ஒரு தடவை சென்னையில் நடந்த இலக்கிய நண்பர்கள் சங்கக் கூட்டத்தில் புதுமைப்பித்தன் பின்வருமாறு கூறினார்; மேல்நாட்டு மோகம் கூடாது என்று நான் சொல்ல வில்லை. மேல் நாட்டிலிருந்து டூத் பேஸ்டையும் . 'பிரஷ்ஷைவும் உபயோகிக்க மோகம் கொள்கிறீர்கள். அதுதான் கூடாது. பேஸ்டையும் பிரஷ்ஷையும் விட்டு விடுங்கள். மேல் நாட்டுக் கருத்துக்களை வாங்கிப் பாருங்கள்!” புதுமைப்பித்தன் இப்படியெல்லாம் மதிப்புரை விஷயத் தில் மிகவும் கடின. சித்தையராக இருந்ததற்குக் காரணம் உண்டு. உண்மையான இலக்கியத்தை உணர்ந்து பாராட்ட அவருக்குத் தெம்பு உண்டு; திராணியும் உண்டு. எதையுமே அர்த்தமற்றுத் தூக்கியெறிந்து பேசுகிற விவகாரம் மதிப்புரை விஷயத்தில் அவரிடம் இல்லை யென்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் காரசாரமாக எழுதியதற்கு காரணம் என்ன? அவரே பதில் சொல்லட்டும்: :

  • 'இன்று வெளிவரும் புத்தகங்களில் சித்த வைத்தியம்

சோதிடம் சிற்றின்பம் பற்றியவை தவிர மற்றவையெல்லாம் நம்மை ஒரு இலக்கிய மைல் கல் என மார் தட்டி.கி