பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 புதுமைப்பித்தன்'. தானத்தின் ஸ்தம்பிப்போடு இணைந்து தோன்றவே செய்கிறது. என்று சொல்ல வேண்டும், இந்த மாதிரியான அம்மானைச் சந்தத்தின் அடிப்படையில் மட்டும் புதுமைப்பித்தன் பாடல்கள் எழுதவில்லை, வெண்பா விலும் பாடல்கள் எழுதினார். அவர் பாடிய வெண்பாவில் இலக்கணம் இராதுதான்; ஆனால் உயிர் இருந்தது. அதற்கு ஓர் உதாரணம், திருச்சி ரேடியோ நிலையக் கவியரங்கில் அவர் பாடிய பாட்டில் ஒரு வெண்பா! 'பண் என்பார்; பாவம் என்பார்; பண்பமர பென்றிடுவார்; கண்ணைச் சொருகிக் கவி என்பார் ~ அண்ணாந்து கொட்டாவி விட்டதெலாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே! மூட்டாளே இன்னமுமா பாட்டு? புது மைப்பித்தன் பாட்டு எழுதுவதில் ஒரு புதிய முறையை, வெற்றிக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய முறையை, ஆரம் பி த்து வைத்தார் என்பதைத் தவிர, அவர் அதில் பரிபூரண வெற்றியை அடைந்தார் என்று சொல்ல முடியாது. ஆனால் புதுமைப்பித்தன் பரிபூரண வெற்றியும் தன்னிகரில்லாத தனித் தன்மையும் பெற்றது பாட்டில் அல்ல. கதையில் வெற்றி யடைந்தார்; -- அதுபோலவே வசனத்திலும் வெற்றியடைந். தார். 'புதுமைப்பித்தனாவது வ?ன வெற்றியாவது' என்று அன்று முணு முணுத்தவர்கள் இன்றும் முணுமுணுக்கக் கூடும். " அவர் என்ன புரியாத தமிழை அல்லவா எழு தினார்?' என்று சிலர் கூறு கிறார்கன்... 'புரியாத தமிழுக்கு புதுமைப்பித்தனி விருந்து ஒரு உதாரணம்: (பிள்ளையாரின் மீதிருந்த) தனித்தனி நபரின் பக்திப் பெருக்கு - டைபாய்ட் வியாதியஸ்தனின் டெம்பரேச்சர் படம் மாதிரி , அன்றைய வியாபார ' ஒட்டத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், பொதுவாகச் சங்கத்தினரின் முழு ஆதரவு . இருந்ததால் விநாயகர் பாடு சராசரி - பக்தி விகிதத்துக்கு மோசமாகி : 'விடவில்லை. அதிகாலை : ஏழு 'மிஸ்ரிக்கு '.