பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 புதுமைப்பித்தன் ஒரு பெரிய நாவல் எழுதத் திட்டம் போட்டு, ஓரளவு எழு தி. வைத்து விட்டுப் போயிருக்கிறார். ஆனால் நாவல் எழுதாத காரணத்தால் மட்டும் ஒரு கதாசி ரியனின் மேதை வெளிப்படவில்லை என்று நினைப்பது தவறு. உலக இலக்கியத்தின் சிறுகதை மன்னர்களாகக் கருதப்படும் ஆண்டன் செகாவ், மாப்பஸான் முதலியவர்கள் சிறுகதைகளை எழுதியே தங்கள் பெயரை, நிலை நாட்டிக் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் நீண்ட சிறுகதைகளும், சில நாவல்களும் எழுதியிருந்தபோதிலும், இவர்களுக்குப் பெயர் வந்தது எல் லாம் சிறுகதைகளின் மூலமாகத்தான், புதுமைப்பித்தன் கதை கன் மட்டும் எழுதவில்லை. கவிதை, கட்டுலர் முதலியன வெல் லாம் எழுதினார். எனினும் அவருக்குப் பெயரும் பிரபலமும் கிட்டியது அவரது சிறுகதைகளின் மூலமாகத்தான். 'ஆலீன் சீறுபழத் தொரு விதை' என்று கூறிவைத்த புலவனின் சூத் திரம் புதுமைப்பித்தனின் கதைகளுக்கும் பொருந்தும். அவரு டைடய கதைகள் அண்டத்தை அளக்கும் சக்தி பெற்றவை.

  • மடல் பெரிது தாழை' யென்றாலும், மகிழம்பூவே இனிமை

யுடையதல்லவா? பக்கம் பக்கமாக எழுதிக் குவித்து, பைண்டு வால்யூம் நாவல்களை வெளியீட்டால் மட்டும் போதுமா? ஷேக்ஸ்பியரையும் தாந்தேயையும் பற்றி ஒரு ஆங்கில விமர்சகர் ' ஷேக்ஸ்பியர் வாழ்க்கையின் அகலத்தை அனத் தான்; தாந்தே ஆழத்தை அளந்தான் என்று குறிப்பிடுகிறார். புதுமைப்பித்தனுக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் உள்ள வித் தியாசத்தையும், இது மாதிரியே சொல்லக் கூடும், புதுமைப் பித்தன் வாழ்க்கையின் ஆழத்தை அளந்த ஆசிரியர். புதுமைப்பித்தனின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு பிரச்னை யைப் பற்றியதாகவே , இருக்கும். அவருடைய கதைகள் பொழுது போக்குக்கான கதைகள் அல்ல. அவரது கதைகள் சமூகத்தை நோக்கிப் பல்வேறு ஆணித்தர் மான கேள்விக் குறிகளை அடுக்குகின்றன; அழுகி இாற்ற மெடுத்துப்போன சமூகத்தின் ஊழல்களைக் கீறிப்பித்து காட்டுகின்றன. வாழ்க்கையின் அன்றாடம் பாட்டின் அடி*