பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் கேள்வி: வாழ்க்கைமீது அவர் கொண்டிருந்த அவ நம்பிக்கை, அவர் எழுத்தில் பல இடங்களில் வெளிப்படுகிறது. அந்த நம்பிக்கை வறட்சியின் ஊற்றுக்கள் என்ன? பிறப்பிலும் வளர்ப்பிலும் திகழ்ந்துபோன சூறைகள் காரணமாக, தம்மளவில் முதலில் கசந்து, அக் கசப்பையே வெளிஉலகத்திலிருந்தும் பொறுக்கிச் சேர்த்துவிடுகிறாரா? அல்லது சொந்தக் குறைகளை விலக்கி வாழ்க்கையை முழுமையாகவும் சுதந்திரமாகவும் பார்த்ததன் விளைவாகவே இந்த நம்பிக்கை வறட்சி, அ:ைசிடம் தோன்றி யுள்ளதா? பதில்: . புதுமைப்பித்தனின் பிறப்பிலும் வளர்ப்பிலும் அவருக்குக் கசப்பான அனுபவங்கள் மலிந்திருந்தன என்பது உண்மை தான். ஆனால் அந்தக் கசப்புக்கும் மத்தியில் அவருக்குத் தாம் ஓர் இலக்கிய கர்த்தா ஆகவேண்டும் என்று தாகமும் வேகமும் இருந்தது. அந்தப் பிடிப்பும் இல்லாது போயிருந்தால் அவர் என்றோ தற்கொலை கூடச் செய்து கொண்டிருக்கலாம், எனினும் வாழ்க்கையில் அவர் அனுபவித்த கசப்பு அவரது இலக் கியங்களிலும் பிரதிபலித்தது உண்மை . * 'ஒரு நீவி யுள்ளம்-சோகத்தால் சாம்பிய உன்ளம்-வாழ்க்கை முட்களில் விழுந்து ரத்தம் கக்குகிற உள்ளம் -- கதைகள் மூலம் பேசு கிறது. இதுதான் நான் கண்டது இந்தக் கதைக் கொத்திலே" சான்று. ரா. ஸ்ரீ. தேசிகன் புதுமைப்பித்தன் கதைகளுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகினரே, அது ஓரளவுக்கு உண்மைதான். தனிமனிதன் மட்டுமல்ல, சமுதாயமே வாழ்க்கை முட்களில் விழுந்து ரத்தம் கக்குகிற பரிதாபத்தை யும் புதுமைப்பித்தன். பார்த்ததனால்தான் சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் அவரது கதைகளிலும் கசப்பும் நம்பிக்கை வறட்சி யும் பிரதிபலித்தன எனலாம். அவரே * * என் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி' என்று ஒப்புக்கொள் கிறார். அவரே அதற்குப் பதிலும் அளிக்கிறார்.