பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் 203

  • 'எதிர்மறையான குணங்கள் இலக்கியத்துக்கு வ லுக்

கொடுக்குமா? என்று கேட்கலாம். அது ஏற்பவர்களின் மனப் பக்குவத்தைப் பொறுத்ததே ஒழிய, எதிர் மறை பாவத்தின் விஷயத் தன்மையைப் பற்றியதல்வி" என்று அவரே கூறு கிறார், அவரே ஒரு முன்னுரையில் கூறியதுபோல், அவரது கதையில் அவர் தமக்குப் பிடித்தவர்களையும் பிடிக்காதவர்களை 4ம் கேலி செய்கிறார். இதனைக் கண்டு அவர்களது முகம் சிவப்பதைக் கண்டு, புதுமைப்பித்தன் மகிழ்ச்சி கொள்கினர். அவர்களது முகம் மேலும் சிவக்க வேண்டும் என்று விரும்பு கினர். சுருங்கச் சொன்னால், சமுதாயச் சிறுமைகளைக் கசப் புணர்ச்சியோடு, விரக்தியுணர்வோடு குத்திக் காட்டுவதன் மூலம், அவர் வாசகர் மனத்தில் சீற்றத்தைக் கிளப்பவே முயல்கிறார். அதாவது அப்படியாவது சமுதா?:த்துக்கு gே Sஷங் வரட்டும் என்பதுதான் அவரது நோக்கம். : எனினும் இந்த ரோஷத்தைக் கிளப்பி விடுவது மட்டும் தான் தமது வேலை என்று அவர் கருதினார். அதற்குமேல் அவர் செல்லவும் இல்லை; செல்ல விரும்பவும் இல்லை. கேள்வி: வாழ்வின் மனங்கள் பற்றியும் அதனைக் களையும் வழிகள் பற்றியும் எப்பொழுதேனும் அவர் உங்களிடம் பேசியது உண்டா ? பதில்: முந்தைய கேள்விக்கு அளித்த பதிலிலேயே வாழ்வின் ஊனங்கள் பற்றிய புதுமைப்பித்தனின் கண்ணோட்டம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். வாழ்வின் ஒனங்கள், சிறுமைகள் குறித்து அவர் மனம் புழுங்கியதுண்டு, ஆனால் அவற்றைப் போக்குவதற்கு எது வழி என்று அவர் அதிகம் கவலைப்பட்டதுமில்லை; இதுதான் வழி என்ற திட்ட வட்டமான முடிவு எதையும் அவர் தேர்ந்திருக்கவும் இல்லை இதுபற்றி நான் அவரிடம் எப்போதாவது பேச முளைத்தால், இலக்கிய கர்த்தாவின் வேலை அதுவல்ல என்று அடித்துத் கூறிவிடுவார். புதுமைப்பித்தனோடு நான் பழகிய காலத்தில்