பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 புதுமைப்பித்தன் தான் வyழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்நோக்கிக் கொன்று டிருந்த 22 வயது இளைஞன். எனவே இந்த விஷயத்தில்தான் எனக்கும் அவருக்கும் முரண்பாடு இருந்தது. சொல்லப் போனால், அப்போது எனக்கிருந்த சமுதாய, அரசியல் கருத்து களைத் தகர்த்துவிட வேண்டும் என்றுகூட அவர் முயன்றார். இதற்கு அவரது 'சமகாலத்து மேலைநாட்டு எழுத்தாளர்கள் சிலர் அவரது கவல த்தையும் கருத்தையும் கவர்ந்திருந்த எழுத் தாளர்கள் சிலர், அந்தக் காலத்துக்கும் முன்பே இத்தகைய தொரு நிலையை ஏற்றுக் கொண்டிருந்ததும் ஒரு காரணம் என தான் கருதுகிறேன். அவர்களின் பாதிப்புக்குப் புதுமைப் பித்தனும் ஆட்பட்டிருந்தார் என்றே நான் உணர்ந்தேன். ' அவருடைய மிக நெருங் கிய இலக்கிய நண்பர்கள் யார்? சமகால எழுத்தாளர்களில் யாருடைய எழுத்தின்மீது அவருக்கு அதிக மதிப்பு இருந்தது? பதில்:. மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று கூறப்பட்ட அந்தக் காலத்து எழுத்தாளர்கள் பலரும் அவருக்கு நண்பர்கள்தான், குறிப்பாக, மணிக்கொடிப் பத்திரிக்கையோடு சம்பந்தப்பட்டி இந்த பி, srஸ். ராமையா, கி. ரா. என்ற கி. ராமச்சந்திரன், க நா, சுப்ரமண்யம், ந. சிதம்பர சுப்ரமண்யம், ந, பிச்சமூர்த்தி முதலியோர் பலரும் அவருக்கு நண்பர்களே. இவர்களைத் தவிர, பாரதிதாசன், காளிதாசன் என்ற பெயரில் எழுதிவந்த ஓ. து. சுப்ரமண்ய யோகி, மஞ்சேரி ஈஸ்வரன், சங்கு அப்? 4மண்யம், கொத்தமங்கலம் சுப்பு, வையாபுரிப் பிள்ளை முதலிய இலக்கிய கர்த்தாக்களும் அவருக்கு நண்பர்கள்தான். இளைஞர் களில் அப்போது நானும் " அழகிரிசாமியும் அவருக்கு நெருங் கி. நண்பர்களாக இருந்தோம். சமகால எழுத்தாளர்களின் அவர் பி. எஸ். ராமையா, பிச்சமூர்த்தி, மெளனி போன் றோரின் கதைகள், , பாரதிதாசன், ச. து, சு. யோகி போன் றோரின் கவிதைகள், கொத்தமங்கலம் சுப்புவின் கிராமியப் பாடல் கள் முதலியவற்றையெல்லாம் பாராட்டினார். எனினும்