பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 புதுமைப்பித்தன் வவு:2:னமுள்ள எல்லா மத்தியதரக் குடும்பங்களையும் போலத் தான் அவரது வாழ்வும் இருந்தது. புத்தகம் வாங்குவது அவரது நிரந்தர ஆசை. கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்தது அது. ஆயிரக்கணக்கில் பணம் புரண்டபோது நூற்றுக்கணக்கில் புத்தகங்களை வாங் கினார். சினிமாவுக்கு எப்போதாவது போவார், நண்பர்களை உபசரிப்பதிலும் அவருக்குத் தாகம் உண்டு. கையில் பணமிருந்தால் தாரான மாகவே உபசரிப்பார். ஒருமுறை நான் இராணி ஹோட்டலில் சாப்பிடப் மோனேன். புதுமைப்பித்தன் சுத்த சைவம்.

    • அதனால் அங்கு நீ சாப்பிடு. நீ சாப்பிடுவதை நான் பார்த்துக்

கோண்டிருக்கிறேன் என்று என் கூட வந்தார். சாப்பிட்டூ முடிந்ததும் பில்லை அவர்தான் கொடுத்தார். அதேபோல் வீடு தேடிவரும் எழுத்தாள நண்பர்கள், அதிலும் சாப்பாட்டு நேரத்தில் வந்து விட்டால், அவர்களைச் சாப்பிடச் சொல்வார்,

  • 'எழுத்தாளன் சமயங்களில் பட்டினியாகக்கூட இருப்பான்.

அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஜம்பமாகப் பேசிக் கொண்டும் இருப்பான். சாப்பிட்டாயிற்று என்றால் ஆயிற்று என்று பொய்யும் சொல்வான். அதற்காகத்தான் வருபவனைப் சாப்பிடச் சொல்வேன் என்று அவரே ஒருமுறை கூறினார். கேள்வி: பொருளாதார முடையினால்தான் அவர் சினிமாத்துறை பில் நுழைந்தாரா? அல்லது சினிமா என்ற கலைச் சாதித் தில் அவருக்குத் தனி ஈடுபாடு இருந்ததா? பதில்: மணரிக்கொடிப்' பத்திரிகையில் சிறிது காலம் சம்பளம் என் 7 எதுவும் இல்லாமல் சேவ் செய்த பிறகு, பத்தாண்டுக் காலத்துக்கும் மேலாக 'தினமணி', 'தினசரி' ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் மாதச் சம்பளம் பெற்று வேலை பார்த்து வந்தவர் புதுமைப்பித்தன். தினசரியை விட்டு விலகியதும். வருவாய்க்கு வழி என்ன என்பது அவரது நியாயமான கவலை, வேறு பத்திரிகைகளிலும் சேர முடியாது.. சேர்ந்தாலும் தினசரி வில் வந்த அளவுக்கு வருமானம் வந்திராது. எனவே, அவர்