பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 புதுமைப்பித்தன் 'இரவில் விசிறிமடிப்பு' என்ற தலைப்பில் அவர் பல எழுத் தாளர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்தியதா சுக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த எழுத்தாளர்கள் யார்? அவர் கனைப் பற்றி அவர் முன் வைத்த வாதத்தின் சாரம்சம் என்ன ? பதில்: 'இரவில் விசிறி மடிப்பு' என்ற தலைப்பில் அவர் ஒரே ஒரு எழுத்தாளரைத்தான் தாக்கி' எழுதியிருந்தார். புதுமைப் பித்தனுக்குப் பிறமொழிக் கதைகளைத் தழுவி எழுதுவது- அதாவது மூலத்தைக் குறிப்பிடும். நேர்மையான தழுவல். மூலத்தைக் குறிப்பிடாத திருட்டுத் தழுவல்-இரண்டுமே பிடிக்காது. இரண்டுக்கும் அவர் எதிரி. பிறமொழிக் கதைகளை அப்படியே மொழி பெயர்த்துத்தான் தரவேண்டும் என்பது அ வர் ஆட்சி. உ.தாரணமாக, பேராசிரியர் கே. சுவாமி நாதன்

  • கட்டை வண்டி' என்ற தழுவல் நாடகத்தை எழுதியிருந்தார்.

அந்த நாடகம் நடிப்பதற்கேயன்றி படிப்பதற்கல்ல என்று குறிப்பிடுவதற்காக அவர் தமது முன்னுரையில் " இது வெறும் காப்பி டிகாக்ஷன், மேடை, சீன், நடிகர்கள் என்னும் சர்க்கரையும் பாலும் சேர்ந்தால்தான் இது சோபிக்கும்” என்ற பொருளில் எழுதியிருந்தார். இதற்கு மதிப்புரை எழுதிய புதுமைப்பித்தன் ஒரே வரியில் இது காப்பி அல்ல, சீத்கரிப் பவுடர்! ** என்று எழுதி அதனைத் தகர்த்து விட்டால், இதே போல் சினிமாத் துறையில் புகுமுன்னர் ஏ, எஸ். ஏ. சாமி என்ற எழுத்தாளர் 'பில்ஹணன்' என்ற நாடக நூலை எழுதி யிருந்தார். வடமொழியிலுள்ள பில்ஹணன்' கதையை போ அதைப் பின்பற்றிப் பாரதிதாசன் எழுதியுள்ள புரட்சிக் கவி என்ற குறுங்காவியத்தையோ குறிப்பிடாமல், எனினும் அதிலுள்ள விஷயங்களை இந்த எழுத்தாளர் பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்ற காரணத்திற்காகவே 'இரவல் விசிறி மடிப்பு' என்ற தலைப்பில் புதுமைப்பித்தன் ' தினசரியில் அவரைத் தாக்கி விமர்சனம் எழுதியிருந்தார். நீண்ட விமர்