பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 புதுமைப்பித்தன் பத்திரிகை தரமான பத்திரிகை அல்ல என்பது ஒரு பக்கம்; ஏதோ வந்த இடத்தில் போகிற போக்கில் கேட்டது ஒரு பக்கம், எனவே புதுமைப்பித்தன் 'அந்தப் பத்திரிகை ஆசிரி கயரைப் பார்த்து, அப்பா, நீ என்னிடம் கதை கேட்காதே, என் கதையை உடன் பத்திரிகை தாங்காது., என் கதை நெருப் பப்டலா நெருப்பு. உன் பத்திரிகை சாம்பலாகி விடும்! என்று கூறிவிட்டார். தமது எழுத்தைப்பற்றி அவர் கெரண் 23டிருந்த மதிப்பின் காரணமாகத்தான் அவர் இவ்வாறு கூறினார், இந்த மாதிரிப் பல சந்தர்ப்பங்கள்... கேள்வி: - அவர் மணிக்கொடியில் எழுதியவர். காந்திஜி எழுப்பிய தேசிய உணர்ச்சி எங்கும் பரவியிருந்த காலம் அது. அவரது நண்பர்களில் பல தேசியவாதிகளாக இருந்திருக்கிறார்கள் . சிலர் நேரடி அரசியலில் இறங்கி சிறையும் சென்றிருக்கிறார் சுள். இவ்வுணர்ச்சிகளைப் புதுமைப்பித்தனும் பகிர்ந்து கொண் துள்ளதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? அரசியல் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஓர் அம்ச மாகத்தான் - இலக்கியத் துறையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற் பட்டது; அந்த மறுமலர்ச்சிக் காலத்தில் மலர்ந்து மணம் பரப்பியவர்தான் புதுமைப்பித்தன்.' இதை மறந்து விடுவதற் கில்லை. புதுமைப்பித்தன் நேரடி - அரசியலில் இறங்கியதும் மில்லை, பங்கெடுத்ததுமில்லை என்பது உண்மைதான். ஆனால் அவரைத் தேசியவாதியல்ல என்று கூறிவிட முடியாது. காந்தி ஜியிடம் அவருக்கு மிகுந்த மதிப்புண்டு:_தமது அந்திம காலத் தில் புனா நகரில் இருந்தபோது காந்திஜியைப் புனா நகரத் தைச் சேர்ந்த ஒருவன் சுட்டுக் கொன்றுவிட்டான்' என்று கேள்விப்பட்டவுடன், நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் கூட புனா என்ற வார்த்தை புண்ணிய' என்பதன் சிதைவு என்று - சொன்னார்கள். இருகண் குருடனைத்தானே நல்ல கண்ணுபிள்ளை என்பார்கள். அதே மாதிரி சரிக்கிரக்கின்