பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் 218 அவரது தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களையும், அவர் காலத்து இளம் தலைமுறையினரின் எழுத்துக்களையும் அவற்றில் பொருட்படுத்தத் தகுந்தவற்றை யேனும் - படித்துப் பார்க்கும் பழக்கம் அவருக்கு இருந்ததா? இப் படிப்பு அவரிடம் ஏற்படுத்தும் எண்ணங்களை வெளிப் படையாகச் சொல்வாரா? அல்லது ரகசியமாக வைத்துக் கொள்வாரா? பதில் : தமது தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் படைப்புக் கள் எல்லாவற்றையும் அவர் படித்தார் , எனச் சொல்ல முடியாது என்ற லும், அவற்றை அவர் நிறையவே பிடிக் திருந்தார். அவற்றில் பாராட்டுக்குரிய:31ற்றைத் தமது கட்டு ரைகளில் அவர் பாராட்டியும் இருக்கிறார். உதாரணமாக, மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் சிலவற்றைப் பற்றி மட்டுமல்லாமல், எஸ்.வி. வி. , கொனட்டை போன்ற வர்கள்' எழுத்துக்கள் சிலவற்றையும் அவர் பாராட்டியிருக் கிறார். ராஜாஜியின் அரசியலை அவர் விமர்சனம் செய்ததுண்டு. என்ருலும், அவரது தேவானை என்ற கதையை அவர் பாராட்டியிருக்கிறார், இளம் தலைமுறையைச் சேர்ந்த எழுத் தாளர்களில், அவரது கவனத்துக்கு வந்தவற்றைப் படித்துட்ட பார்ப்பதும் உண்டு. தமது மனத்தில் அவை பற்றி ஏற்பட்ட கருத்தை அவர் சொல்லத் தயங்குவதில்லை, அதை தேரிலும் சொல்வார்; எழுதவும் செய்வார். அதில் ஒன்றும் அவருக்கு ரகசியம் கிடையாது. இளம் தலைமுறையினரில் நம்பிக்கை ஃப்ளிக்கக் கூடியவர்களை ஊக்குவிக்கவும் செய்வார். உதாரணி" மாக, எனது கதைகளைக் கையெழுத்துப் பிரதியிலேயே என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்டார். சில நல்ல திருத்தங்களுக்கும் கூட அவர் யோசனை கூறியதுண்டு. அதே போல் ஒருமுறை இ அழகிரிசாமியின் *வெந்தழலால் வேகாது' என்ற கதையின் சாராம்சத்தை நான் அவரிடம் சொன்னேன். உடனே அவர், • அந்தக் கதையைக் கொண்டுவரச் சொல், அது நல்ல பத்திரி கையில் வெளிவர வேண்டும் என்று சொல்லி, அந்தக் கதை