பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220. . புதுமைப்பித்தன் மின் கையெழுத்துப் பிரதியைத் தாமே வாங்கி, அதனை ஒரு பிரபல பத்திரிகையில் கொடுத்து வெளிவரவும் செய் தார், , கேள்வி : தாம் வாழ்ந்த காலத்தில் தமது எழுத்துக்கள் பரவலாகப் படிக்கப்படவில்லை என்ற குறை அவருக்கு இருந்ததா? அல்லது தமது எழுத்தின் தன்மை அதுபோன்ற ஒரு பிர சாரத்தை அளிக்காது என்ற சுய மதிப்பீடு செய்து கொண்டி ஈந்தாரா? பதில் : அப்படிப்பட்ட குறையும் அவருக்கு இருந்தது. அதே சமயம் தமது எழுத்தின் தன்மை ' அத்தகையது என்ற பிரக் ' ஞையும் அவருக்கு இருந்தது. “புகழ் இல்லாமல் இலக்கியம்" கர்த்தா உயிர்வாழ முடியாது, நேர்மையான புகழ் இலக்கியம் கர்த்தரவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடச் சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்துக்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது? என்று கடிதம்' என்ற கதையில் அவர் எழுதுகிறாரே. அது புதுமைப்பித்தனின் இதயக் குரல் என்றே சொல்லலாம். அதே சமயத்தில் 'தமது' கதைகளை எல்லோரும் ரசித்துவிட முடியாது. அவை பாமர ரஞ்சகமானவையல்ல என்பதையும் அவர் உணர்ந்தே இருந் தார். எனவேதான் அவர் தமது கதைத் தொகுப்பின் முன் னுரையொன்றில் ." "வாழையடி வாழையான வரும் எவனோ ஒரு ரசிகனுக்காக நான் எழுதுகிறேன், என்று குறிப்பிடவும் நேர்ந்தது. அந்த வாழையடி வாழையான் ரசிகர் கூட்டம் இன்றுள்ள அளவுக்குக்கூட அவர் காலத்தில் இல்லை என் பதும் உண்மை . எனவே அப்போதும் அவர் எழுதினார். என்றால், பலனை எதிர்பாராக கர்மயோகியைப்போல், தமது இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் விஷயங்களைக் கதை களாக எழுதித் தீர்ப்பதொன்றே தமது கடமை என்று அவர் கருதினார். அவ்வாறு பாரத்தை இறக்கி வைப்பதில்தான் அவர் மகிழ்ச்சியும் நிவர்த்தியும் கண்டார் என்றுகூடச் சொல்ல் லாம்..