பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 அனுபந்தம் மலர்ச்சி என்ற வார்த்தை புதிய வேகமும் பொருளும் கொண் டதாக இருந்தது என்றும், அதனைச் சிலர் வரவேற்றார்கள், பலர் கேலி செய்தார்கள் என்றும் அவரே குறிப்பிடுகிறார், இந்த மறுமலர்ச்சியின்' ' விடிவெள்ளியாகத்தான் புதுமைப் பித்தன் மணிக்கொடிப் பத்திரிகையைக் கருதினார் என்பதில் சந்தேகம் இல்லை. மணிக்கொடிப் பத்திரிகை தின்று போன தைப் பற்றிக் கூறும்போது, இதுதான் மணிக்கொடியின் கதை, தமிழில் புதிய பரிசீலனைகள் செய்ய வேண்டும் என்று கோட்டை கட்டியவர்களின் ஆசையின் கதை. இந்தக் கதை பின் ஒரு அம்சம்தான் எனது கதைகள், என்று அவரே எழுதியிருக்கிறார். கேள்வி : மேல் நாட்டு இலக்கியத்தில் அவரைக் கவர்ந்த ஆசிரியர் கன்ஃபார்?. அவர் செய்த மொழிபெயர்ப்புக்கள் அவருக்குப் பிடித்தவற்றிலிருந்து அவ்வப்போது கைக்குக் கிடைப்பதைப் பத்திரிகைத் தேவையை முன்னிட்டு மொழிபெயர்க்கப் பட்டவையா? அல்லது தமிழ் இலக்கியத்தில் புது முயற்சிகளைத் தூண்டவேண்டும் என்ற பிரக்ஞையில் தேர்ந்தெடுக்கப் பட்டவையா? பதில் : நான் அவரோடு பழகத் தொடங்கிய காலத்தில் அவர் எந்தெந்த ஆசிரியர்களிடம் ஈடுபாடு கொண்டிருந்தார் என்று முன்பே கூறியிருக்கிறேன். மேலை நாட்டு ஆசிரியர்களில் அவரைக் கவர்ந்த எழுத்தாளர்கள் பலர். ஆங்கில எழுத்தாள் - களில் ஷேக்ஸ்பியர், தாமஸ் ஹார்டி, பிரெஞ்சு எழுத்தாளர் களில் எமிலி ஜோலா, பால்ஜாக், அமெரிக்க எழுத்தாளர்களில் மார்க் ட்வெய்ன், சிங்க்ளர் லெவிஸ், ஹென்றி ஜில்லர், இத்தாலிய எழுத்தாளர்களில் பொக்காசியோ, கஜி பிரண் டெல்லோ, இக்னேஷியோ சைலோன், ரஷ்ய் எழுத்தாளர் களில் டால்ஸ்டாய், டாஸ்டாவ்ஸ்கி, செகாவ் இவ்வாறு ஒரு பெரிய பட்டியலே போட்டுக் கொண்டு போகலாம்."ஏய் ல்லோ, இக்காளர்களில் பொன், ஹென்றார்களில்