பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 புதுமைப்பித்தன் கேள்வி : .. எழுதவிருக்கும் கதைகளைப்பற்றி அவர் உங்களிடம் கூறியதுண்டா? அப்படிக் கூறும்போது கதையின் சிந்தனை அம்சத்தைப்பற்றிப் பேசுவாரா? அல்லது சம்பவக் கோவை புடன் கதையைச் சொல்வாரா? பதில் : எழுத - நினைத்திருக்கும் கதைகளைக் குறித்து அவர் கூறியதுண்டு. . அப்படிப் பல கதைகள் கூறியிருக்கிறார். ஆயினும் கதையைச் சம்பவக் கோவைய்ாகச் சொல்லப் மாட் டார், கதையில் தாம் பிரதி பலிக்கவிருக்கும் மையக் கருத்தை , அது சம்பந்தப்பட்ட கதை அம்சத்தை மட்டும்தான் கூறு வார், ' உதாரணமாக, அன்றிரவு' கதையை எழுதிய மாதிரி, பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த புராணக் கதையை மையமாகக் கொண்டு ஒரு கதை எழுத வேண் டும் என்று சொல்லிக் கொண் டிருந்தார். கதையம்சமும் கருத்தும் இதுதான். , பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையவில்லை. மலருக தேவர்கள்தான் இரண்டு பக்கமும் தின்று கடைந்தனர். ஒரு பக்கத்திலுள்ள தேவர்கள் கடை வதைத் தர்மமாகக் கருதிப் பயன் கருதாது கடைந்தார்கள். மறுபக்கத்திலுள்ளவர்கள், அமுதம் வந்தால் ' எப்படி பங்கு வைக்கலாம் என்ற எண்ணத்திலேயே கடைந்தார்கள், அப்படி நிளைத்தவர்களின் எண்ணம் வலுப்பெற வலுப்பெற அவர்கள் அசுரராக மாறிவிட்டார்கள். இதுதான் அவர் சொன்ன கதை. இதேபோல் பட்டினத்தாரை வைத்து ஒருநெடுங்கதை அல்லது நாவல் எழுதவேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டி ருந்தார். பட்டினத்தாருக்கு வாழ்க்கையில் பாசமும், பற்றும் கடைசியில்தான் அறுந்தன என்பது கதைப் , பொருள். மனைவி, மகன், தாய் ஆகிய மூன்று பாசக் கயிறுகள் அவரைப் விரித்திருக்கின்றன. முதலில் மகன் மறைகிறான். பிறகு மனைவியை விட்டு அவர் பிரிகிறார். என்றாலும் தாயின்மீது பரசம் அறவில்லை. அது அவளைச் சிதையில் சுற்றிய. வின் னர்தான். அறுகிறது. இந்தப் பாசப் பிணைப்பின் காரண