பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் 23! யாருடைய கவிதைகளை அவருடைய முயற்சிகளின் தொடர்ச்சி யாகப் பார்க்கிறீர்கள்?.. புதுமைப்பித்தனே “பாட்டும் அதன் பாதையும்' என்ற கட்டுரையில் குறிப்பிட்ட யாப்பமைதி பழக்கத்தினா லும் வகையறியா உபயோகத்தினாலும் மலினப்பட்டு வரும்போது ரூபத்தின் மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பு. ரூபமில்ாைமல் கவிதை இருக்காது. கவிதை யுள்ளதெல்லாம், ரூபம் உள்ளது என்று சொல்ல வேண்டும், இன்று ரூடமற்ற கவிதை எனச் சிலர் எழுதி வருவது எவற்றையெல்லாம் ரூபமென்று பெரும் பாலோர் ஒப்புக் கொள்கிறீர்களோ அவற்றுக்குப் புறம்பான ரூபத்தை அமைக்க முயல்கிறார்கள். எனக்கொள்ள வேண்டுமே ஒழிய அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்கள் என்று தினைக்கக் கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை, இன்று வசன கவிதை' என்ற தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கைகள் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல" என்று எழுதியிருக்கிறார், இன்று புதுக் கவிதை என்று பெயரை மாற்றிக்கொண்டு வந்துள்ள படைப்புக் கள் பழைய வசன கவிதைப் பாணியிலேயே பெரும்பாலும் இருக்கின்றன. எனவே இந்தப் படைப்புக்களைப் புதுமைப்பித் தன் வரவேற்றிருப்பார். என்று நான் கருதவில்லை. புதுமைப்பித்தன் -- அவரே சொன்ன மாதிரி ஒரு புதிய ரூபத்தில் கவிதை எழுதும் முயற்சியைத் தொடங்கி வைத்தார், எனினும் அவர் அவ்வாறு எழுதிய கவிதைகளில் “நிசத்தானோ' சொப்பனமோ? 'ஓடாதீர்!' 'காதல் பாட்டு,' 'மாகாவியம்' என்ற நான்கும்தான் "உருப்படியானவை, என்ன லும், அவருக்கே இது தொடக்கம்தான். ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் இதே பாணியில் மேலும் வலுவான சோதனை களைச் செய்திருக்கலாம். அவரது கவிதைகளால் அதிகமான பாதிப்பு எதுவும் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டுவிடவில்லை. என்றாலும், காலஞ்சென்ற திருலோக சீதாராமும் நானும் அவரது கவிதையின் உருவ ரகசியத்தைப் புரிந்து கொண்டு அந்த வழியில் நடை பயின்று கிலி'. கலிகைகனே எழுதியிருக் கிறோம் என்று நினைக்கிறேன். என்னோட்ட பொறுத்தவரையில்