பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் - 4 திருஐணம் காவல் படிப்பு, ஞானோபதேசம், இளநீர்த் திருட்டு சுடுகாட்டு நித்திரை - 'இத்யாதிக் காரணங்களால், புது ை- அப் பித்தனின் கல்லூரிப் படிப்பு, உரிய காலத்தைக் கடந்து உத்தரவாத காலமும் இல்லாமல் நீள ஆரம்பித்தது. ஒரு. மட்டும் 1931-ம் வருஷம். அவர் , கல்லூரிப் படிப்பீனின் அம் கரையேறினார்; பி. ஏ. என்னும் பட்ட விலாசம் அவ "எது பெயருக்குப் பின்னால் வந்து ஒட்டிக்கொண்டது., சொக்கலிங்கம் பிள்ளைசின் குடும்பத்தாரோ பரம் பரை பரம்பரையாய் சர்க்கார் உத்தியோகத்தில் இருந்து வந்தவர்கள். எனவே 'கால் ரூபாய்ச் சம்பளமானாலும் கவர்ன்மென்ட் உத்தியோகம் வேண்டும்' என்னும்', மத்திய தர வகுப்பின் சம்பிரதாயப்படி சொக்கலிங்கம் பிள்ளை யும், தம் மகன் பி, ஏ. பட்டம் பெற்றதும், சர்க்கார் உத்தியோகத்தில் இடம் பிடித்து, தம்மைப்போல் பிள்ளை யையும் ஒரு தாசில்தாராக்கிப் பார்த்துவிட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார். ஆனால் புதுமைப் பித்தன், பி. ஏ. வகுப்பைத் தாண்டுவதற்குள் , அவரது வயது, இருபத்தைந்தைத் தாண்டி விட்டது! இருபத் தைந்தை மீறிய பின் சர்க்கார் உத்தியோகத்துக்கு உத்தர வாதம் ஏது? இருந்தாலும் சொக்கலிங்கம் பிள்ளை விட வில்லை. தமது செல்வாக்கை யெல்லாம் உபயோகித்து, சென்னை கவர்னர் , வரையிலும் முட்டி மோதிப் பார்த் தார். பலிக்கவில்லை. மேலும், புதுமைப்பித்தனும் கற்ப