பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் வழி இருட்டு 29 னார்கள். மதுரையில் சில நாட்கள்; திண்டுக்கல்லில் சில நாட்கள், அந்தந்த ஊரிலுள்ள இன பந்துக்களின் வீடு களில்தான் அவர்கள் தங்கியிருந்தார்கள். பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒன்று சேர்ந்து புறக்கணித்த ஜீவன்களை, பிழைப்புக்கு வழியற்ற தம்பதிகளை, பந்து ஜனங்கள் மதிப்பார்களா? “ மாப்பிள்ளைச் சோறு போடுவார்களா? புதுமைப்பித்தனுக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகம்; நரக வேதனை. முடிவில்.. அவர் .. மனைவியை மட்டும் திருவனந்தபுரத்துக்கு அனுப்ப வழி செய்தார்; வேலை கிடைத்தவுடன் , அழைத்துக் கொள்வதாகச் சொன்னார். தாமும் வெளியேறினார்.